இந்திய வீரர் அக்சர் படேல் தன் மீது ஒருகட்டத்தில் உலகக்கோப்பையில் கோபமாக இருந்ததாக கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.
இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் அக்சர் படேல் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருந்தார்.
ஏற்படுத்திய தாக்கம்
இந்தத் தொடரில் இரண்டாவது சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் சேர்க்கப்படவில்லை.
மேலும் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி தான் இந்திய அணியின் கண்களை திறந்தது. அங்கிருந்து இந்திய அணிக்கு எல்லா போட்டியும் நாக் அவுட் போட்டியாக மாறியது. இந்திய அணி ஒவ்வொரு போட்டியையும் கவனமாக விளையாடி வெற்றி பெற்று இறுதியில் சாம்பியன் ஆனது.
அவர் கோபமாக இருந்தார்
இதுகுறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “அக்சர் படேல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நீக்கப்பட்டதால் கோபத்தில் இருந்தார். நிச்சயமாக அவர் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அனுபவம் வாய்ந்தவர். அணியை வழிநடத்தக் கூடியவர். நான் ஒரு தவறான முடிவை எடுத்து விட்டதாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அது ஒரு கடினமான உரையாடலாக இருந்தது. அடுத்த நாள் நாங்கள் இதுகுறித்து பேசினோம்”
இதையும் படிங்க : டி20 உலகக் கோப்பை பைனல்.. அத்து மீறிய ஹர்திக் பாண்டியா.. வழக்குப்பதிவு.. நடந்தது என்ன?
“தென் ஆப்பிரிக்க போட்டியில் ஏற்பட்ட தோல்விதான் எங்கள் கண்களை திறந்தது. நாங்கள் அதற்குப் பிறகு திரும்பிய வர முடியாத சூழல் உருவானது. அதற்கு அடுத்த ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு நாக் அவுட் போட்டியாக மாறியது. நாங்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம்” என்று கூறி இருக்கிறார்.






