ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இது தான் – கௌதம் கம்பீர் கருத்து

0
3002
MS Dhoni and Gautham Gambhir

டி20 உலகக்கோப்பை அடுத்த மாதம் 17ஆம் தேதி அமீரக மைதானங்களில் தொடங்குகிறது.இதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அனுபவ வீரர் சஹால் இல்லாதது, மற்றொரு அனுபவ வீரர் அஸ்வின் திடீரென அணியில் இணைந்தது போன்ற பல ஆச்சரியங்களை அணி நமக்கு கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டி20 உலக கோப்பை அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் என்ற அறிவிப்பு பல ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

ஏற்கனவே அமீரக மைதானங்களில் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் தோனி ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணிக்கு ஆலோசகராக டி20 உலக கோப்பை தொடருக்கு பொறுப்பேற்றுக் கொள்வார். பிசிசிஐ நிறுவனத்தின் செயலாளர் ஜெய்ஷா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார். வெற்றிகரமாக அணியாஅணியாக திகழ்ந்தாலும் இந்திய அணிக்கு ஏன் தோனியின் தேவை இருக்கிறது என்பது குறித்து முன்னாள் துவக்க வீரர் கௌதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்கு ஏற்கனவே தலைமை பயிற்சியாளர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் போன்ற பலர் இருந்தாலும் தோனியின் தேவை அனைத்து இருக்கத்தான் செய்கிறது என்று கம்பீர் கூறியுள்ளார். பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் இருந்து கிடைக்காத ஏதோ ஒன்று தோனியிடம் இருந்து கிடைக்க போவதாகவும் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தோனி நியமிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி ஏதோ ஓரிடத்தில் குறைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்கத் தேவையில்லை. தோனியின் நியமனம் முழுக்க முழுக்க அவருக்கு இருக்கும் பரந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். தோனி கேப்டனாக இருக்கும் போது பல்வேறு ஆட்டங்களில் அழுத்தம் நிறைந்த சூழல்களை கண்டிருப்பார். அதை அவர் எப்படி எதிர்கொண்டு களத்தில் சாதித்தார் என்பதைத்தான் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி அதை எதிர்கொண்டு வெற்றி கொள்ள வேண்டும் என்பதை இந்திய வீரர்களுக்கு எடுத்துக் கூறத்தான் தோனியின் நியமனம் இருக்கும் என்று காம்பிர் கூறியுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி தொடர்களில் எந்த ஒரு கோப்பையும் வெல்லவில்லை. தோனி கோலி இணைந்து இந்த முறை கோப்பையை பெற்று தருவார்கள் என்று ஒவ்வொரு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -