தொடரும் ரிஷப் பண்டின் மோசமான ஆட்டம் : ராகுலை கீப்பிங் செய்ய சொல்லிவிட்டு பண்டை நீக்கிவிடலாமா ? என்ற ரசிகரின் கேள்விக்கு கம்பீர் அளித்துள்ள விளக்கம்

0
585
Gambhir about KL Rahul Keeping Over Pant

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எம்எஸ் தோனி க்கு பின்னர் மிக அற்புதமாக விக்கெட் கீப்பிங் செய்த இரு பேட்ஸ்மேன்கள் விருத்திமான் சஹா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தான். அதிலும் குறிப்பாக தற்போது இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வரலாற்று வெற்றி படைக்க அவர் மிகப்பெரிய அளவில் உதவியதை நாம் மறந்துவிட முடியாது.

ஆனால் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரிலும் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலும் பேட்டிங்கில் பண்ட் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. மறுபக்கம் கேஎல் ராகுல் தற்போது தன்னுடைய அபாரமான ஃபார்ம் மூலம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

எனவே ரிஷப் பண்ட்டை உட்காரவைத்து கே எல் ராகுலையே விக்கெட் கீப்பராக விளையாட வைத்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர் ஒருவர் கௌதம் கம்பீருடம் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் கேள்விக்கு கௌதம் கம்பீர் சிறப்பான ஒரு விளக்கத்தை தற்போது அளித்துள்ளார்.

ரசிகரின் கேள்விக்கு விளக்கம் அளித்த கௌதம் கம்பீர்

முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன் 100 முதல் 150 ஓவர்கள் நின்று விக்கெட் கீப்பிங் செய்த பின்னர், நேரடியாக வந்து ஓபனிங் ஆடுவது இயலாத காரியம். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் வேண்டுமானால் ஒரு ஓப்பனிங் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பிங் செய்த பின்னர் வந்த விளையாடலாம்.

- Advertisement -

ஆனால் டெஸ்ட் போட்டியில் மணிக்கணக்கில் விக்கெட் கீப்பிங் செய்தபின்னர் ஒரு ஓப்பனிங் வீரர் நேரடியாக வந்து தனது இன்னிங்சை தொடர்வது மனதளவிலும் உடலளவிலும் சிறப்பாக இருக்காது. எனவே ஒரு அணியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கென தனி சிறப்பம்சம் கொண்ட பேட்ஸ்மேன் அவசியம் தேவை. அந்த அத்தனை அம்சமும் தற்பொழுது ரிஷப் பண்ட் இடம் உள்ளது. எனவே டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதுதான் சரியான முடிவு என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் குறித்து விவாதிப்பது தவறு

கடந்த சில நாட்களில் அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்பது கூறுவது தவறு. கடந்த சில மாதங்களில் அவருடைய விக்கெட் கீப்பிங் திறமை மிகப்பெரிய அளவில் மெருகேறி உள்ளது. அதேசமயம் அணிக்கு தேவைப்படும் விதத்தில் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவரைப் பற்றி விவாதிப்பது என்னைப் பொருத்தவரையில் அவசியமில்லாத ஒன்று என்று கௌதம் கம்பீர் இறுதியாக கூறி முடித்தார்.

- Advertisement -