இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டி20 உலக கோப்பை வெற்றியை ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணனுக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் எப்பொழுதும் தனிப்பட்ட வீரர்களின் சாதனைகளைப் பற்றி பேசக்கூடாது என்றும், ஒரு அணியாக சேர்ந்து வெற்றி பெறுவதை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றும், இதை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து கம்பீர் கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் நினைத்திருந்தால் மூன்று போட்டிகளிலும் சதம் அடித்திருக்க முடியும். ஆனால் எங்களால் 250 ரன்கள் எடுத்திருக்க முடியாது. எப்பொழுதும் தனிப்பட்ட சாதனைகள் குறித்து பேசக்கூடாது. அணியின் வெற்றி குறித்து பேசப்பட வேண்டும். இதை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும்”
“நான் எப்பொழுதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் அணியை முன்னிறுத்தும் வீரர்களைக் கொண்டு அணியை உருவாக்க வேண்டும் என விரும்பினேன். எனக்கு அதற்கு ஒரு நல் வாய்ப்பாக கேப்டன் சூரியகுமார் யாதவ் என் பக்கத்தில் அதே எண்ணத்துடன் இருந்தார். இதன் காரணமாக என் வேலை எளிதானது”
“இந்த உலகக் கோப்பை வெற்றியை ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டில் செய்த விஷயங்களுக்காகவும், திரை மறைவில் நிறைய விஷயங்களை லக்ஷ்மணன் செய்து கொண்டிருப்பதற்காகவும் சமர்ப்பிக்கிறேன். மேலும் அகர்கருக்கும் சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் அவர் மிக நேர்மையாக செயல்பட்டார். மேலும் நிறைய விமர்சனங்களை சந்தித்தார்”
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் முழு நாட்டிற்கும் ஒரு பாடம்.. அபிஷேக் இஷானுக்கு நான் சொன்ன அறிவுரை இதுதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி
“இங்கு யாருடைய எராவும் கிடையாது. வீரர்கள் உள்ளே சென்று தன்னலம் இன்றி சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் அவ்வளவுதான். குறைந்தபட்சம் நான் இந்த இடத்தில் இருக்கும் வரையில் தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.