இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹரிக் பாண்டியா தான் இன்னும் பத்து ஐசிசி தொடர்களை வெல்ல விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
நேற்று இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் 96 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது இந்திய அணிக்கு மூன்றாவது டி20 உலகக்கோப்பையாகவும், ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டாவது டி20 உலகக்கோப்பையாகவும் அமைந்திருக்கிறது.
முக்கியமான செமி பைனல்
இந்த உலகக் கோப்பை தொடரின் செமி பைனலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவர் மிக முக்கியமானதாக அமைந்தது. அந்த ஓவரில் அவர் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டு தந்தது, இருபதாவது ஓவரில் இங்கிலாந்து 30 ரன்கள் எடுக்கும்படி ஆகியது. மேலும் பும்ரா பேசிய கடைசி இரண்டு ஓவர்களுக்கான பலனை ஹர்திக் பாண்டியா ஓவர் முழுமையாக்கியது.
இது குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது ” எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட 10 ஆண்டுகள் இருக்கிறது. எனவே நான் 10 ஐசிசி தொடர்கள் வெல்ல விரும்புகிறேன். இந்தியாவில் உலகக்கோப்பை வென்றது உற்சாகமானது, மிகவும் உணர்ச்சிகரமானது. எல்லாமே அற்புதமாக உள்ளது. போட்டிக்கு முன்பே நாங்கள்தான் சாம்பியன்கள் என்று உணர்ந்தேன்”
நான் தந்த அறிவுரை
“நான் நினைத்தது என்னவென்றால் எங்களுக்கு தவறான முடிவு வராது என்பதுதான். நான் தோல்வி குறித்து எந்த இடத்திலும் சிந்தித்ததே கிடையாது. கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இங்கிலாந்துக்கு எதிராக 19வது ஓவரை வீசிய பொழுது 2024 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நினைத்துக் கொண்டேன். நம் கடினமான விஷயங்களை செய்யும் பொழுது நல்ல நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என அபிஷேக் மற்றும் இஷானுக்கு சொல்லி இருக்கிறேன்”
இதையும் படிங்க : கோச் ஸார் உங்களுக்கு சிரிப்பு அழகா இருக்கு.. எல்லாரும் வேற மாதிரி பண்ணிட்டீங்க – தோனி வாழ்த்து
“நீங்கள் கடினமாக உழைத்தால், மற்றவர்களின் வெற்றியில் மகிழ முடிந்தால், கடவுள் உங்களுக்கு வாய்ப்புகளை தருவார். சஞ்சு சாம்சனுக்கு இதுதான் நடந்திருக்கிறது. இது முழு நாட்டிற்கும் ஒரு பாடம். நீங்கள் கடினமாக உழைத்தால் உங்களுக்கு கடவுள் வாய்ப்புகளை தருவார்” என்று கூறி இருக்கிறார்.






