“எதிர்கால சூப்பர் ஸ்டார்.. 21வயது இந்த வீரர்தான்.. இந்தியா கிடையாது.. கில்கிறிஸ்ட் வாகன் கணிப்பு

0
244
Vaughan

உலக கிரிக்கெட்டில் பேட்டிங்கில் எப்பொழுதும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்களே பெரிய அளவில் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று இருந்த காலத்தில் கவாஸ்கர் பேட்டிங்கில் மிக முக்கிய வீரராக உலகக் கிரிக்கெட்டில் இருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமான பிறகு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டின் தூதுவராகவே மாறினார். அவருக்கு இருந்த வரவேற்பு கிரிக்கெட் உலகில் யாருக்கும் கிடைக்காதது.

இதற்கு அடுத்து சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளையும் முறியடிக்க ஒருவரால் முடியும் என்று இந்தியாவிலிருந்து வந்த விராட் கோலி காட்டினார். அவர் தற்போது விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சாதனைகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று உலக கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு என்றே உலகம் முழுவதிலும் இருந்து ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இப்படியான நிலையில் உலக கிரிக்கெட்டின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் இந்தியாவின் சுப்மன் கில் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதற்கேற்றார் போல் அவருடைய பேட்டிங் செயல்பாடுகளும் கடந்த வருடத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவின் ஆடம் கிலகிறிஸ்ட் மற்றும் இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் இருவரும் எதிர்கால கிரிக்கெட்டின் மிகப்பெரிய விஷயமாக பாகிஸ்தானை சேர்ந்த 21 வயதான இடதுகை பேட்ஸ்மேன் சைய்ம் அயூப்பை தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த இளம் வீரர் பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் 33 ரன்களும், ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி 152 ரன்களும் எடுத்திருக்கிறார். இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை.

சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் துவக்க வீரராக களமிறங்கும் இவர் 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தார். மேலும் பாகிஸ்தான் டி20 லீக்கிலும், கரீபியன் டி20 லீக்கிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கரீபியன் லீக்கில் இந்த முறை இவர் விளையாடிய அமேசான் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.