முழு வீடியோ; வேகத்தில் சாதனை படைத்த மார்க் வுட்; அனல் பறக்கும் பந்துவீச்சு!

0
996
Mark wood

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு பரபரப்பான போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று தற்பொழுது இரண்டுக்கு பூஜ்ஜியம் என மிகவும் வலுவான நிலையில் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு வாழ்வா சாவா என்கிற நிலையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்றால் தொடரை இழக்கும் டிரா செய்தால் தொடரை சமநிலையில் முடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த நாதன் லயனுக்கு பதிலாக டாட் மர்பியும், ஜோஸ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக போலன்ட்டும் விளையாடுகிறார்கள். இதே போல இங்கிலாந்து அணிக்கு மொயின் அலி திரும்ப வந்திருக்கிறார். ஆண்டர்சன் மற்றும் டாங்க் இருவரும் வெளியே போக வோக்ஸ் மற்றும் மார்க் வுட் இருவரும் வந்திருக்கிறார்கள்.

இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அணியில் பந்துவீச்சாளர்கள் மாற்றமும் டாஸ் முடிவும் இங்கிலாந்துக்கு இன்றைக்கு சாதகமாக அமைந்தது.

- Advertisement -

முதல் விக்கட்டாக டேவிட் வார்னர் விக்கெட்டை பதினாறாவது முறையாக ஸ்டூவர்ட் பிராட் கைப்பற்றினார். இரண்டாவது விக்கட்டான உஸ்மான் கவஜா விக்கெட்டை மணிக்கு 153 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்டெம்புகள் சிதற மார்க் வுட் கைப்பற்றினார்.

இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஸ்மித் விக்கெட்டை மீண்டும் வந்த ஸ்டுவர்ட் பிராட் கைப்பற்றினார். லபுஷேன் விக்கெட்டை
வோக்ஸ் கைப்பற்றினார். தற்பொழுது நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

இந்தப் போட்டியில் அதிவேகப்பந்துவீச்சாளர் மார்க் பந்துவீச்சில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி அவர் சாதனை படைத்திருக்கிறார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இரண்டாவது டெஸ்ட் உலகச் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் கிரீசுக்கு வெளியே நின்று வேகபந்துவீச்சாளர்களை விளையாடிய லபுசேன், இன்று மார்க் வுட் பந்துவீச்சுக்கு கிரீசுக்கு வெளியே வந்து நிற்க முடியாமல் உள்ளே நின்றது அவரது வேகத்திற்கான சாட்சி. தற்பொழுது பரபரப்பான கட்டத்தில் ஆசஸ் தொடர் சென்று கொண்டிருக்கிறது!