கம்பீருக்கு நிச்சயம் இந்த விஷயத்தை செய்யணும்.. அப்பதான் பயிற்சியாளரா வரமுடியும் – அனில் கும்ப்ளே பேட்டி

0
46
Gambhir

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து அவர் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக வருவது உறுதியானதாகவும் தெரிகிறது. இது குறித்து அனில் கும்ப்ளே முக்கிய கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் இந்த மாதம் இறுதியில் முடிவுக்கு வருகிறது. மேலும் அவர் தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை.

- Advertisement -

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சில வெளிநாட்டு முன்னாள் வீரர்களை அணுகியது. ஆனால் தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தால் ஆண்டு முழுவதும் அணிவுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக கவுதம் கம்பீர் சிறப்பாக செயல்பட்டார். அவர் அந்த அணியில் செய்த மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின. மேலும் அந்த அணியே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் இந்த ஆண்டு வென்றது. எனவே அடுத்து அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகத் தெரிகிறது.

இதுகுறித்து அணில் கும்ப்ளே கூறும்பொழுது “கம்பீர் நிச்சயமாக திறமையானவர். ஆனால் அவருக்கு நீங்கள் கால அவகாசம் கொஞ்சம் கொடுக்க வேண்டும். அவர் அணிகளை எப்படி கையாளுகிறார்? என்பது குறித்து நாம் பார்த்திருக்கிறோம். அவர் இந்திய அணி மற்றும் பிரான்சிஸைஸ் கிரிக்கெட்டில் அணிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு என்பது வேறானது. எனவே அவர் இதை தீர்த்துக் கொள்ள கொஞ்சம் நேரம் தர வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : நேபாள்கிட்ட அடி வாங்கி இருப்போம்.. நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் – தெ.ஆ கேப்டன் மார்க்ரம் பேச்சு

உங்களுக்கு பயிற்சியாளராக வலிமையான ஒருவர் தேவை. ராகுல் டிராவிட் போல அவர் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு இந்த டி20 உலகக் கோப்பை சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், சில மூத்த முக்கிய வீரர்கள் தங்கள் கேரியரின் இறுதிக் கட்டத்திற்கு வருகிறார்கள். எனவே இந்தக் காலகட்டத்தை கடந்து பணியாற்றும் பயிற்சியாளர் தேவை” என்று கூறியிருக்கிறார்.