3 ஃபார்மட்.. 1 ஸ்வீப் ஷாட்.. சூரிய குமாருக்கு செம்ம சான்ஸ்.. டிராவிட் வழியில் கம்பீர் யோசிப்பாரா?

0
150
Surya

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்த காரணத்தினால், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை சீரமைப்பது குறித்து நிறைய விவாதங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வகையில் மீண்டும் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுவாக எழுந்திருக்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்குப் பிறகு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் டி20 இந்திய அணியில் மட்டுமே கேப்டனாக சூரியகுமார் யாதவ் இடம்பெற்றார். அதே சமயத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்தியத் தேர்வுக்குழு சூரியகுமார் யாதவை டி20 வடிவத்தில் மட்டுமே முக்கியமான வீரராக பார்க்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இலங்கையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் விளையாடி இருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் கூறியிருக்கிறார்கள். காரணம் அவர் டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடினார். மேலும் சுழல் பந்துவீச்சு திட்டங்களை முறியடிப்பதற்கு அவரிடம் ஸ்வீப் ஷாட் அடிக்கும் திறமை அபாரமாக இருக்கிறது.

மேலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரையில் மட்டுமே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்கள் என்கின்ற உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். மேற்கொண்டு அவர்கள் நல்ல உடல் தகுதியிலும் ஃபார்மிலும் இருந்தால் மட்டுமே தொடர்வார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த வகையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் யூனிட்டுக்கு 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் போல சர்வதேச கிரிக்கெட் விளையாடிய மூத்த வீரர் ஒருவரின் அனுபவம் தேவையாக இருக்கும். எனவே சாம்பியன் டிராபி தொடருக்குப் பிறகு சூரியகுமார் யாதவ் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

மேலும் சூரியகுமார் யாதவ் விளையாடும் முறைக்கு அவருக்கு தேயாத புதுப்பந்தில் விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது. பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி விளையாட கூடியவர் என்பதால் அவர் டாப் ஆர்டரில் விளையாட வேண்டிய முக்கியத்துவம் எழுகிறது. மேலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அவரால் சாதிக்கக் கூடிய திறமை இருப்பதை நாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முறையில் பார்க்கிறோம்.

இதையும் படிங்க : எனது நண்பர் கௌதம் கம்பீர் மாதிரி.. ஆனா இப்படி இருந்தா பாகிஸ்தானுக்கு பிடிக்காது – ரிக்கி பாண்டிங் பேட்டி

எனவே சூரியகுமார் போன்ற தனி வீரராக போட்டியை வெல்லும் வீரரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிக காலம் ஒரே கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாட வைக்காது. தொடர்ந்து அவரை குறைந்தபட்சம் வெள்ளைப் பந்து வடிவத்திற்கு கொண்டு வருவதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் தற்போதைய சூழ்நிலையில் இருந்திருக்கிறது. அதிகபட்சம் அவர் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய ஒருநாள் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம். டிராவிட் சூரியகுமாருக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு கொடுத்தது போல கம்பீர் கொடுப்பாரா? என்று பார்க்க வேண்டும்.