டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வியால் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியினால் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் கேப்டனாக பதவி வகித்தார்.
மேலும் அணியின் சீரற்ற செயல்பாடுகள் மற்றும் கேப்டன் பாபர் அசாமின் மோசமான கேப்டன்சி ஆகியவையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அமைப்பு மாற்றத்தை முன்னெடுக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான கில்லெஸ்பியை டெஸ்ட் கிரிக்கெட்டின் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த சூழ்நிலையில் சக நாட்டவரும் நெருங்கிய நண்பருமான ரிக்கி பாண்டிங் கில்லெஸ்பி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கில்லெஸ்பியை பற்றி கூறினால் அவர் சிறிது கௌதம் கம்பீரைப் போன்றவர். அவர் எங்கு சென்றாலும் அவரது பயிற்சி ரெக்கார்டுகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அவருக்கு இங்கு சில சவால்கள் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இவர் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் மற்றும் தனது சொந்த வழியில் சிந்திக்கும் அமைதியான நபர்.
சில வாட்சப் குழுக்கள் எங்களிடம் பல ஆண்டுகளாக தொடர்பில் இருக்கின்றன. அதில் இருக்கும் அனைவருமே எங்கள் வயதுடைய வீரர்கள். எனவே அனைவரும் கில்லஸ்பியை வாழ்த்தினார்கள் மற்றும் பயிற்சியாளர் பதவியில் சிறப்பாக செயல்படவும் வாழ்த்தினார்கள். ஒரு உண்மையைச் சொல்வதென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நான் ஆச்சரியப்படவில்லை.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. வெளிநாட்டு வீரருக்கு தடை ஓகே.. ஆனா அவங்களுக்கு இந்த நீதியும் கொடுங்க – அஸ்வின் கோரிக்கை
இது ஒரு வித்தியாசமான வடிவம் என்று முன்பே அறிந்தது தான். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி அவர்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. நீங்கள் சில மாற்றங்களை செய்ய விரும்பவில்லை என்றால் முடிவுகள் இதே போன்ற வழியில் தான் இருக்கும்” என்று கூறி இருக்கிறார். பாகிஸ்தான் அணி வங்கதேசம் அணியோடு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.