ருதுராஜ் செய்த ஏற்க முடியாத தப்பு.. பின்னணியில் இருப்பது தோனியா?.. சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்

0
2075
Ruturaj

இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் ஒரே தவறை செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் தோல்வி அடைந்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னவென்று முழுமையாக பார்க்கலாம்.

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெறும் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

சிஎஸ்கே செய்த அதே தவறு

சிஎஸ்கே அணி இன்றைய போட்டிக்கு தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோரை நீக்கி விட்டு அவர்களுடைய இடத்திற்கு விஜய் சங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரையும் கொண்டு வந்தது. இருந்த போதிலும் சிஎஸ்கே அணியால் வெற்றி பெறவில்லை. சிஎஸ்கே அணி செய்ய வேண்டிய சரியான மாற்றங்களை செய்யாத காரணத்தினால் தான் இந்த தோல்வி வந்திருக்கிறது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இந்த போட்டியில் குறிப்பாக ஜேமி ஓவர்டனை எடுக்காமல் தொடக்க ஆட்டக்காரர் கான்வேவையும், ராகுல் திரிபாதி இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜையும் தேர்வு செய்திருக்க வேண்டும். இதனால் ஒரே நேரத்தில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு பக்கத்திலும் சிஎஸ்கே அணி கூடுதலாக வலிமை பெற்றிருக்கும்.

- Advertisement -

தவறான முடிவால் ஏற்பட்ட இழப்பு

சிஎஸ்கே அணியில் பவர் பிளேவில் கலில் அகமதுக்கு சப்போர்ட் செய்ய இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது. மேலும் டாப் ஆர்டரில் இன்று ரச்சின் ரவீந்தரா டக் அவுட் ஆன நிலையில், கான்வே இருந்திருந்தால் பேட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுத்திருப்பார். ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தாலும் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க : அவரை நம்பிதான் நான் 3வது இடத்தில் வரேன்.. ஆனா எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது – சிஎஸ்கே கேப்டன் பேட்டி

இந்த நிலையில் சரியான முடிவுகளை எடுக்காமல் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுப்பதற்கு காரணம் கேப்டன் ருதுராஜா இல்லை தோனியா? என்கின்ற சந்தேகம் வெளியில் எழுந்திருக்கிறது. மேலும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -