அவரை நம்பிதான் நான் 3வது இடத்தில் வரேன்.. ஆனா எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது – சிஎஸ்கே கேப்டன் பேட்டி

0
4034

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் தொடரின் 11 ஆவது ஆட்டத்தில் சென்னை அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து அதன் கேப்டன் ருத்ராஜ் கெயிகுவாட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே தோல்வி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் நித்திஷ் ராணா 36 பந்துகளை எதிர் கொண்டு 81 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்கள் குவித்தார்.

அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் கேப்டன் ருத்ராஜ் போராட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆறு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோல்விக்கு முக்கிய காரணம்

இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ருத்ராஜ் கூறும் போது “முக்கியமாக பவர் பிளேவில் ராஜஸ்தான் அணியின் நித்திஷ் ரானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தடுமாற்றத்தில் இருந்தபோது அவரை வீழ்த்த நாங்கள் முன்னோக்கி செல்லவில்லை. அவரைத் தொடர்ந்து தடுமாற்றத்தில் வைத்திருக்க முயற்சித்து இருக்க வேண்டும். அந்த சமயத்திலேயே 8 முதல் 10 ரன்கள் அதிகமாக சென்றது. 180 ரன்கள் வெற்றி அடையக்கூடிய இலக்கு தான். அவர்கள் ஒரு கட்டத்தில் 200 ரன்கள் எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர்.

இதையும் படிங்க:6 பந்தில் 19 ரன்.. தோனியை காலி செய்த சந்தீப் ஷர்மா.. சிஎஸ்கே கேப்டன் போராட்டம் வீண்.. 6 ரன்னில் ராஜஸ்தான் வெற்றி

அந்த சமயத்தில் நாங்கள் அவர்களை கட்டுப்படுத்தினோம். நான் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்வது குறித்து கேட்கிறீர்கள். பல வருடங்களாக ரகானே மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தார். மிடில் வரிசையில் ராயுடு கவனித்துக் கொண்டார். மிடில் ஓவர்களை கவனிக்க நான் சற்று தாமதமாக வந்தால் நல்லது என்று நினைத்தோம். திருப்பாதி டாப் ஆர்டரில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய முடியும். இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல, நான் சீக்கிரமே பேட்டிங் செய்ய ஆரம்பித்து விட்டேன். எனவே இதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தொடக்கம் சிறப்பாக இருந்தால் எங்கள் பிரச்சனைகள் அனைத்துமே நேர்மறையாக மாறும். எங்கள் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. எனவே அனைத்தும் நமக்கு சாதகமாக மாறும் போது போட்டிகளில் வெல்வோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -