இங்க இருந்து ஆஸ்திரேலியா நல்லபடியா திரும்பவே முடியாது – முகமது கைப் அதிரடி!

0
211
Kaif

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியாவில் தற்பொழுது நடந்து வருகிறது!

நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு இடத்திலும் ஆஸ்திரேலியா அணியை திரும்பி வர விடாமல், இந்திய அணியின் பௌலிங் ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் மூவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தடுத்து இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்கள். இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து கிரிக்கெட் வட்டத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்!

- Advertisement -

இதற்கு அடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் திரும்பி வந்த ஆஸ்திரேலியா முதல் இரண்டு நாட்கள் முடிவில் ஆட்டத்தை தன்வசம் வைத்திருந்து வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்தது. ஆனால் மூன்றாவது நாளில் 48 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்து பரிதாபமாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.

தற்பொழுது இந்திய அணி குறித்தும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டி குறித்தும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது
” ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்தத் தொடரில் நிறைய ரன்கள் அடித்துள்ளார். இரண்டாவது டெஸ்டில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மேலும் அவர் சுழற்
பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என பாடம் நடத்தினார். நேராக லாங் ஆனில் பீல்டர் இருந்தாலும், ரோகித் சர்மா அவரை வீழ்த்தி சிக்சர் அடித்தார். ஆள் இருந்தாலும் தன்னால் அடிக்க முடிகின்ற திறமையைக் காட்டினார். அவரைப் பார்த்து பந்தை எங்கு எப்படி அடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவார்” என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் ” இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் பற்றி பேசினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளில் அஸ்வின் மிகச் சிறப்பான பந்துவீச்சை காட்டினார். இரண்டாவது நாளில் முடிவின்போது டிராவிஸ் ஹெட்டின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி செட்டில் ஆகி இருந்து, மூன்றாவது நாள் வந்த பொழுது, அவரை தனது முதல் ஓவரில் வீழ்த்தி ஆஸ்திரேலிய வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். எங்களுக்கு ஆட்டத்தை மாற்றக்கூடிய பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் தொடர்ந்து அவர் “அஸ்வினை பற்றி சொன்னேன். ஜடேஜா எங்களுக்கு ஆட்டத்தை மாற்றக்கூடிய இன்னொரு வீரர். பந்துவீச்சில் நாங்கள் சிராஜ் மற்றும் அக்ஷர் இருவரிடமும் இன்னும் வரவில்லை. சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் பந்து கூட வீசவில்லை. எனவே எங்களிடம் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த இடத்திலிருந்து தொடரில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் திரும்பி வருவது என்பது முடியாத காரியம்” என்று கூறியிருக்கிறார்!