தமிழக வீரர் உட்பட.. 2023ல் அறிமுகம் ஆகியும்.. இந்திய அணியின் அருகில் இப்போது இல்லாத 4 வீரர்கள்

0
279

இந்திய கிரிக்கெட் அணி நவீன கிரிக்கெட்டில், புதிய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் தேசிய அணிக்குத் தனித்துவமான நம்பிக்கையும் திறமையும் கொண்டு வருகின்றனர்.இருப்பினும் அவர்களது கதைகள் எச்சரிக்கைக் கதைகளாக மாறி விடுகின்றன. இது கிரிக்கெட்டின் அதிர்ஷ்டமிலாத் தன்மையைக் காட்டுகிறது.

2023ம் ஆண்டு டி20 சர்வதேச அணியில் அறிமுகமாகி விளையாடி, திறமை இருந்தும் அணியில் வாய்ப்பு கிடைக்காத 4 வீரர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

சிவம் மாவி

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர். அண்டர் 19 அணியில் சிறப்பாக ஆடிய அவர், ஐபில்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். ஸ்விங், வேகம் என பல திறமைகளைக் கொண்டிருடுந்தார். இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார்.

அப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி தனது வருகையை நன்றாக பதிவு செய்தார்.
அதன் பிறகு அவர் பங்களிப்பு அணிக்கு பெரிதாக உதவவில்லை. அதன் பிறகு அவரை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டது.

- Advertisement -

ராகுல் திரிபாதி

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், ஐபில்லில் புனே அணியில் விளையாடிவர். அதன் பிறகு ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். தன் 30 வயதில் இந்திய அணிக்காக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வாய்ப்புப் பெற்றார். முதல் போட்டி நடைபெறாத நிலையில் 2வது போட்டியில் 16 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார்.

அவரது ஆக்ரோசமான பேட்டிங்கும் நிதானமான அணுகுமுறையும் இவர் மீது நம்பிக்கையை அதிகரித்தன. அதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி அவர் விளையாடத் தவறியதால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஷாபாஸ் அகமது

பெங்கால் ஆல்ரவுண்டரான இவர், ஒரு முப்பரிமாண வீரர். ஒரு நல்ல பேட்ஸ்மேன், திறமையான பந்து வீச்சாளர். பங்களாதேஷுக்கு எதிராக டி20 தொடரில் அறிமுகமான இவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவர் பேட்டிங்கில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
நிரந்தர வீரராக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் பெரிதாக வாய்ப்பு இல்லை.

சாய் கிஷோர்

தமிழகத்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர். சுழற்பந்தில் நல்ல திறமையைக் கொண்டிருந்தார். ஆசியக் கோப்பையில் அறிமுகமான அவர் 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பின் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இவரும் ஷாபாஸ் அகமது போலவே இந்திய அணி கொண்டிருந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவர் ஐபில்லில் பெங்களூரு அணிக்கு நல்ல பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்.