“நல்லவேளை ஐபிஎல் பேமஸ் ஆகறதுக்கு முன்ன ரிட்டையர்டு ஆயிட்டேன்.. அவமானப்படறதை பொறுக்க முடியாது” – அக்தர் பேச்சு

0
259
Akthar

கிரிக்கெட் உலகில் தன்னுடைய அதிவேக பந்துவீச்சால் மட்டும் அல்லாமல் அதிரடியான கருத்துகளாலும் கவனம் இருக்கக் கூடியவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் சோயப் அக்தர்.

90களின் பிற்பகுதியில் அறிமுகமான அக்தரின் ஆரம்ப காலக்கட்ட கிரிக்கெட் ஒரு சூப்பர் ஸ்டாருக்கான வரவேற்புக்கு நிகரானது. அவரது வேகத்தை பாகிஸ்தான் கொண்டாடும்போது, எதிரணியின் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பார்ப்பார்கள்.

- Advertisement -

ஆனால் சில வருடங்களில் அவர் மீது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதற்குப் பின்பு அவரை பார்த்து விளையாடினால் ரன்கள் நிறைய கிடைக்கும் என்பது தெரிந்து விட்டது.

மேலும் அக்தர் களத்தில் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் வார்த்தை போர்களிலும் சூடானவர். சேவாக்குடன் அவர் மோதியது எல்லாம் தற்பொழுது சிறந்த நினைவுகளாக தங்கிவிட்டன. மேலும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்திருக்கிறது.

2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்ட பொழுது, அந்த அறிமுக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி 42 பந்துகள் வீசி 52 ரன்கள் தந்து, ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அதற்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

ஐபிஎல் தொடர்பு ஒன்று பிரான்சிஸைஸ் டி20 லீக்குகளின் ஆதிக்கம் குறித்து பேசிய அக்தர் ” கடவுளுக்கு நன்றி. நான் இந்தக் காலத்தில் கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறேன். பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை அவமதிக்கும் விதத்தை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

இது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். நான் தற்காலத்தில் விளையாடு இருந்தால் ஒரு சீசனில் 800 முதல் 900 ஓவர்கள் வீசியிருப்பேன். ஒரு சீசனில் 20 டி20 லீக்குகளில் விளையாடியிருப்பேன்.

வீரர்கள் இப்பொழுது ஒரு ஆண்டில் தங்களுடைய தேசிய அணிக்காகவும் இப்படியான டி20 லீக்குகளுக்கும் விளையாடுவதற்கான டைம் டேபிளை தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். வீரர்கள் தங்களுடைய சம்பாத்தியத்திற்காக எதிர்காலத்திற்காக இப்படி நகர்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.