“இந்தியா வெற்றிப் பயணத்தை நிறுத்த.. எங்ககிட்ட இது இருக்கிறது அதிர்ஷ்டம்!” – டெவோன் கான்வே நம்பிக்கை பேச்சு!

0
2423
Conway

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் லீக் சுற்று முடிந்து அரையிறுதி சுற்றை எட்டி இருக்கிறது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உடன் உலகக் கோப்பைத் தொடர் முடிவுக்கு வருகிறது.

உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்தியா தனது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் இருக்கிறது

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளும் விளையாடிய அரையிறுதி போட்டியில் இந்திய அணி எதிர்பார்க்காத விதத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராகப் பெற்ற தோல்வியின் வடு இன்னும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் காயாமல் அப்படியே இருக்கிறது. தற்பொழுது இந்திய அணிக்கு அதற்கான பதிலடி தருவதற்கு சரியான சந்தர்ப்பம் ஒன்று அமைந்திருக்கிறது. ஆனால் நியூசிலாந்து அணியை எப்பொழுதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே முடியாது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே பேசும் பொழுது “இந்திய அணி எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் அரையிறுதிக்கு நிறைய வேகத்தை எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் வலுவான அணியைக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனாலும் நாங்கள் இந்திய அணியை எதிர்நோக்குகிறோம். தொடரை நடத்தும் நாட்டிற்கு எதிராக அரையிறுதியில் விளையாடுவதை நினைக்க உற்சாகமாக இருக்கிறது. அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்கள் என்பது தெரியும். ஆனால் எங்களுக்கு அந்த சவால் பிடித்திருக்கிறது.

இது எங்களுக்கு மீண்டும் ஒரு சிறந்த சந்தர்ப்பம். எங்கள் அணியில் நிறைய அனுபவசாலிகள் இருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம். ஏற்கனவே இதே போன்ற சூழ்நிலையில் இருந்த வீரர்கள் தற்போது அணியில் இருப்பது நல்லது.

உலகக்கோப்பையின் இறுதி போட்டிக்கு வருவது எங்களுடைய இலக்கு ஆகும். அந்த இலக்கில் ஒரு படியை நெருங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மீதமுள்ளவைகளை அதுவே தானாக பார்த்துக் கொள்ளும்!” என்று கூறியிருக்கிறார்!