டி20 கிரிக்கெட்டில் ஓய்வு.. இனி இதை விராட் கோலி செய்யாமல் விடவே மாட்டார் – அர்னால்டு நம்பிக்கை

0
622

தற்போது நடைபெற்ற வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் விராட் கோலி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல் அர்னால்டு சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வந்த விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சொதப்பலான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தினாலும், இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணி உலக கோப்பை வெல்ல மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பிறகு பேசிய விராட் கோலி டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே விராட் கோலி பங்கு பெரும் நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெற்று தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்த வருடம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறும் நிலையில் அதை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரசல் அர்னால்ட் விராட் கோலியின் ஆர்வம், அர்ப்பணிப்பு என அனைத்தையும் இந்திய அணிக்காக முதன்மையாக கொடுத்து வருகிறார் என்றும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி விரைவில் நம்பர் ஒன் வீரராக மாறுவார் என்றும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இது குறித்து ரசூல் அர்னால்டு விரிவாக கூறும்போது “விராட் கோலியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் களத்தில் அவரது வெளிப்பாடு என எதிலுமே இரண்டாம் தரத்தில் இல்லாமல் முதன்மையாக அணிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதுமே தனித்துவமான ஒரு வீரர். எனவே இனி விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக மாறுவார் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் 24 கேரட் தங்கம்.. கில் இதை பார்த்து கத்துக்கணும்.. தோற்றது இந்த இடத்தில்தான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

தற்போது நடைபெற்ற வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 23 ரன்களுக்கு விராட் கோலி ஆட்டம் இழந்தார். இனி இரண்டு ஒருநாள் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்கும் பட்சத்தில் 27 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் மிக விரைவாக இணைய காத்திருக்கிறார். எனவே அத்தகைய சாதனை இந்த தொடரில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -