இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கு எதிராக வெல்ல வேண்டிய போட்டியை டை ஆக்கியது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தும் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்தும் இந்திய முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் 230 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. அதிரடியாக விளையாடி மிகச்சிறந்த அடித்தளத்தை கேப்டன் ரோஹித் சர்மா ஏற்படுத்திக் கொடுத்தார். இருந்தபோதிலும் இதை மற்ற பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் பந்துவீச்சில் கில்லுக்கு ஒரு ஓவர் கொடுக்கப்பட்டதும் தற்பொழுது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “போட்டியில் ஒரு தவறு நடந்ததும் அது என்னவென்றால், சுப்மன் கில்லுக்கு ஒரு ஓவர் கொடுத்த பொழுது, அந்த ஓவரில் 14 ரன்கள் செல்ல, வேகம் இலங்கை அணியின் பக்கம் மாறியது. எனக்கு அதை பார்த்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. இந்தியா பெடலில் இருந்து காலை எடுத்து விட்டு, இது எங்களுக்கு மிகவும் சாதாரண போட்டி என்று சொன்னது போல இருந்தது.
இலங்கை அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விடுவார்கள் என்பது போலான நிலை இருந்தது. அல்லது அவர்கள் 170 இல்லை 190 ரன்கள் எடுக்கலாம். இந்திய அணி 50 ஓவர்கள் முழுமையாக விளையாடாமல் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் வந்து விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இந்த ஆரம்ப நிலையில் இருந்து சில விஷயங்களை இந்திய அணி கற்றுக் கொள்வார்கள்.
இந்த போட்டியில் என்னுடைய இரண்டாவது பெரிய பாயிண்ட் ரோகித் சர்மா. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்ததும், ஸ்கோரிங் விகிதமும் குறைவாக இருந்த காரணத்தினாலும், இப்படியான ஒரு சூழ்நிலையில் ரோகித் சர்மா விளையாடிய விதம் 24 கேரட்டுக்கு சமம்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் ஆஸியை தாண்டி.. இந்திய அணி படைத்த வித்தியாசமான சாதனை.. விடாது தொடரும் வினோதம்
ரோகித் சர்மா அற்புதமான முறையில் பேட்டிங் செய்கிறார். அவர் பேட்டிங் செய்யும் வேகத்தில் எதிர் அணியின் ஆரம்ப திட்டங்களை உடனடியாகச் சிதைக்கிறார். அவர் பத்து ஓவர்களில் இந்திய அணியை 70 ரன்களுக்கு கொண்டு வந்துவிட்டார். சுப்மன் கில் அதே ஆடுகளத்தில் அதே பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவ்வளவு பொறுமையாக விளையாடுகிறார். ஆனால் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முடிகிறது. அவரிடம் அப்படி ஒரு பேட்டிங் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.