விராட் கோலியின் மோசமான பேட்டிங் பார்ம்க்கு.. காரணமே ரோகித் சர்மாவும் இந்திய அணியும்தான்- டிவில்லியர்ஸ் விளக்கம்

0
372

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் நாளை நடைபெற உள்ள முக்கியமான அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்துமே வலுவாக இருக்கும் நிலையில், நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மட்டுமே தற்போது கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. இது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் முன்னாள் சகவீரருமான ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்தியாவில் பேட்டிங் டிராக்குகளில் களமிறங்கி ஓப்பனிங்கில் அற்புதமாக ஜொலித்த விராட் கோலி 700 ரன்களுக்கு மேல் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதன் விளைவாக டி20 உலக கோப்பையிலும் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்த நிலையில், ரோகித் சர்மாவும் அவரை தொடக்க ஆட்டக்காரராகவே களம் இறக்கினார்.

வங்கதேச அணிக்கு எதிராக ஓரளவு நன்றாக விளையாடிய விராட் கோலி, அதற்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும், அதற்கு முன்னர் நடைபெற்ற லீக் போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினார். இந்திய அணி தற்போது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், விராட் கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது கவலை அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியின் பார்ம் அவுட்டுக்கான காரணங்களைக் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “விராட் கோலி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. ரோஹித் சர்மா அற்புதமான பேட்டிங் ஃபார்மிலும் அவருக்கு கீழ் இருக்கும் பேட்டிங் வரிசை சிறப்பாகவும் விளையாடிக் கொண்டிருப்பதால் விராட் கோலி கொஞ்சம் அழுத்தத்துடன்தான் விளையாடுகிறார். அவர் எப்போதெல்லாம் அதிக அழுத்தத்தில் இருக்கிறாரோ அப்போதுதான் நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறார்.

விராட் கோலி பந்தை பார்த்து நிதானமாக விளையாட முடியும். அதனால் நாள் இறுதியில் இவரது பேட்டிங் ஃபார்ம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கிரிக்கெட் ஒரு நிலையற்ற விளையாட்டு. அது ஒரு ரோலர் கோஸ்டர் கேம் போல சில சமயங்களில் ஏற்றமும், இறக்கமும் இருக்கும். நீங்கள் பார்ம் இன்றி கீழே இருக்கும் போது உங்கள் இதயத்தோடு விளையாடிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் சில சமயங்களில் நீங்கள் மிக ஆபத்தானவர்களாக இருப்பீர்கள்.

இதையும் படிங்க:இந்தியா பழைய மாதிரி இல்ல.. இந்த ஒரு விஷயத்தை நம்புறதுனால இப்போ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க- பட்லர் பேட்டி

விராட் கோலியும் தற்போது இந்த சூழ்நிலையில்தான் இருப்பார். அவர் தைரியம், இதயம், எதிர்த்துப் போராடக் கூடிய மனநிலையில் இருந்து கொண்டிருப்பார். இதனால் இப்படிப்பட்ட வீரர்களும் அணியில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இதிலிருந்து விராட் கோலி கடந்து அடுத்த போட்டியில் நிச்சயம் பெரிய ரன்களைக் குவிப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -