இந்தியா பழைய மாதிரி இல்ல.. இந்த ஒரு விஷயத்தை நம்புறதுனால இப்போ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க- பட்லர் பேட்டி

0
7061

நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜாஸ் பட்லர், இந்திய அணிக்கு எதிராக நடக்க உள்ள போட்டி குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி, அதன் பிறகு வரிசையாக வெற்றிகளை குவித்து, சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பேட்டிங்கில் ஜாஸ் பட்லர், மொயின் அலி, பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் வலு சேர்க்கிறார்கள். பந்துவீச்சை பொறுத்தவரை சோப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரசீத் ஆகியோர் தற்போது நட்சத்திரங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.

நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி இந்த முறையும் கோப்பையை கைப்பற்ற உறுதியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு சற்றும் சளைக்காத எதிரணியாக இந்திய அணி தற்போது விளங்குகிறது. இந்திய அணியிலும் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக விளங்குவதால், இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே சரிசமமாக உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜாஸ் பட்லர் இந்த முறை வித்தியாசமான இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போவதாகவும், இந்த முறை இந்திய அணி கடும் சவால் அளிக்கக்கூடிய அணியாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “நாங்கள் இந்த முறை வித்தியாசமான இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போகிறோம். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் விதம், மற்றும் அவர் அணியை வழிநடத்தும் விதம் ஆகியவை சிறப்பாக இருக்கிறது.

மேலும் இந்திய அணி மிகவும் சுதந்திரத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க முயற்சிக்கின்றனர். 2022ஆம் ஆண்டு இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, இந்திய அணி மாற்றங்களை செய்துள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டு உலக கோப்பையிலும் எதிரொலித்தது. இந்தியா இந்த விளையாட்டு பாணியில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்தியா இந்த முறை ஆக்ரோஷமாக விளையாட போகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இங்கிலாந்தும் ஆக்ரோஷமான முறையிலேயே விளையாடும்.

இதையும் படிங்க:எங்க சோக்கர்ஸ் வரலாறு மாறப்போகுது.. நாங்க அந்த ஒரு விஷயத்தை விடப் போறோம் – தெ.ஆ கோச் சவால்

கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது மிகவும் சிறப்பான நாள். அது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும். அதுவும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்து வெளியேறியது, சிறந்த தருணங்களில் ஒன்று. முக்கியமாக நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தினை பெற்றோம்” என்று பட்லர் கூறி இருக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

- Advertisement -