அடுத்த வருடம் 19 ஆவது ஐபிஎல் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் வீரர்கள் தக்கவைப்பு விபரம் வருகிற 15-ம் தேதி அணிகளால் வெளியிடப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹசிம் ஆம்லா ஐபிஎல் தொடரில் தனக்கு சவாலான பந்துவீச்சாளர் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் திருவிழா இதுவரை 18 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19 ஆவது தொடர் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விபரம் இந்த மாதம் 15ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன.
இந்த சூழ்நிலையில் கடந்த 2016 மட்டுமே 17ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஹசிம் ஆம்லா ஐபிஎல் தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நிச்சயமாக பும்ரா என்று குறிப்பிடுவேன். நான் கூற வருவது என்னவென்றால், அவர் இந்தியாவுக்காக எவ்வளவு அற்புதமாக விளையாடி இருக்கிறார் என்று நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் பும்ரா இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்றும் அவர் என்னை பலமுறை சவால் செய்திருக்கிறார் என்றும் நினைக்கிறேன். அவர் மிகவும் திறமையான ஒரு வீரர் மற்றும் அனைத்து வடிவத்திலும் நம்ப முடியாத ஒரு பந்துவீச்சாளர். அவர் பந்து வீசுவதை பார்ப்பதே அழகாக இருக்கிறது.
இதையும் படிங்க:2026 டி20 உலககோப்பைக்கான இந்திய அணி.. முக்கிய வீரருக்கு இடமில்லை.. ஹர்சா போக்லே சொன்னதை பாருங்க
சொல்வது கடினம், வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒரு பாக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சிறப்பான வழிநடத்தக் கூடிய யூனிட் என்று கூறுவேன். அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு மிகச் சிறந்த யூனிட்டை கொண்டுள்ளது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த இரண்டு அணிகளுமே ஒரு சிறந்த யூனிட்டைக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இருவருமே வெற்றிகரமான அணிகளாக திகழ்கிறார்கள்” என்று அவர் பேசியிருக்கிறார்.






