பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யவில்லை. 2026 டி20 உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது.
ஜெய்ஸ்வாலைத் தவிர, இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியையும் ஹர்ஷா தேர்வு செய்யவில்லை. ஆசிய கோப்பை 2025 போட்டியின்போது காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா உடல் தகுதியை பெற்றிருந்தால் தமது அணியில் எந்த நிபந்தனையும் இன்றி சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.
ஹர்ஷா உலககோப்பை அணி:
மற்றபடி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு தேர்வுக்குழு தேர்வு செய்த அணியும், ஹர்ஷாவின் அணி முழுமையாக ஒத்துப்போகிறது. இந்தியா ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒரு நாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இழந்த நிலையில் தற்போது டி20 தொடரை இளம் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்ஷா போக்லேயின் 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
தொடக்க ஜோடி:
ஜெய்ஸ்வால் இதுவரை 23 டி20 போட்டிகளில் 723 ரன்கள் குவித்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 164.31 ஆக உள்ளது. கடைசியாக 2024 ஜூலை மாதம் இந்தியாவுக்காக 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு, அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரை தேர்வுக்குழு பரிசோதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அபிஷேக் ஷர்மா ஒன்னும் பேட்டை சும்மா சுத்தல.. இது நடந்தால் திட்டாதீங்க.. ரசிகர்களுக்கு பார்த்தீவ் அட்வைஸ்
ஆசிய கோப்பை முதல், கில் அபிஷேக்குடன் தொடக்க வீரராக இறங்கி வருகிறார். பஞ்சாபைச் சேர்ந்த இடது கை வீரர் அபிஷேக் ஷர்மா, ஆஸ்திரேலியாவில் நடந்த டி20ஐ தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 163 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார். 2025 ஆசிய கோப்பையிலும் போட்டியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள டி20 உலககோப்பை முன், இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சில டி20 தொடர்களில் விளையாட உள்ளது.






