உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள நிலையில், இதில் தென்னாப்பிரிக்க அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற விதம் குறித்து விமர்சித்த நிலையில் மற்றொரு தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கிரீம் ஸ்மித் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2024-25 அட்டவணையை பொறுத்தமட்டில் தென்னாப்பிரிக்க அணி மற்ற அணிகளை காட்டிலும் குறைவான போட்டிகளில் விளையாடும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அணியான ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தென்னாபிரிக்க அணி தகுதி பெற்றது குறித்து விமர்சித்து பேசி இருந்தார். அதாவது தென்னாப்பிரிக்கா குறைவான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று முன்னேறிவிட்டது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்த நிலையில் இதுகுறித்து மற்றொரு தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
எங்கள் வீரர்கள் இதை செய்வார்கள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எனக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் அதிக நேரம் செலவிட்டிருக்கிறார். தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்களுக்கு முன்னாள் இருந்த சூழ்நிலையை சமாளித்து உள்ளார்கள். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெற்றி பெறுவதை விட சிறந்த உந்துதல் எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:அந்த பயமே வேண்டாம்.. விராட் ரோஹித் இதுல என்ன செய்யணும்னு.. அவங்களுக்கு நல்லா தெரியும் – இர்பான் பதான் நம்பிக்கை
அது விமர்சகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அமைதிப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக மைக்கேல் வாகனின் கருத்துக்களுக்கு தென்னாபிரிக்க அணி கோப்பையை வெற்றி பெற்று அவரை அமைதிப்படுத்தும் என்று ஸ்மித் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். கடந்த முறை இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.






