இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலி ரோஹித் சர்மா மோசமான பேட்டிங் ஃபார்ம்
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் மோசமான பேட்டிங் பங்களிப்பை இந்திய அணிக்கு வெளிப்படுத்தினார்கள். இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட் வாஸ் ஆனது.
அதே போல ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மீதம் உள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி எனப்படும் முக்கிய கிரிக்கெட் தொடர் இருக்கும் நிலையில் இருவரது பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இதுகுறித்து இந்திய முன்னால் வீரர் இருப்பான் பதான் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இருவர் குறித்தும் பயம் வேண்டாம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட துவங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை டெஸ்ட் கிரிக்கெட் என்பது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. விராட் கோலி ஆப் ஸ்டம்புக்கு வெளியே விளையாட சென்றாலும் சரி, ரோகித் சர்மா தனது ஆட்டத்தை இயல்பாக ஆட முயற்சித்தாலும் சரி அதை சரி செய்து கொள்வது ரொம்ப முக்கியம்.
இதையும் படிங்க:2வது சென்னை டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஷமி ஆடுவாரா?.. நீக்கப்படும் வீரர்.. முழு அலசல்
ஒரு நாள் தொடர் என்பது இவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான வடிவம் ஆகும். எனவே அவர்கள் இருவரும் மிக வலுவாக மீண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று இருப்பான் பதான் கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்தவுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கும் நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






