ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கின்றன. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி 10 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் இந்த அணியில் அதிகபட்சமாக அன்ட்ரூ ரஸ்ஸல் 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார்.
கொல்கத்தா அணியை மிரள வைத்த வணிண்டு ஹசரங்கா
நடந்து முடிந்த ஏலத்தில் இலங்கை அணியை சேர்ந்த ஸ்பின் பந்து வீச்சாளர் ஹசரங்காவை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பெங்களூர் நிர்வாகம் கைப்பற்றியிருந்தது. அந்த அணியில் கடந்த ஆண்டு வரை சிறப்பாக விளையாடி வந்த சஹாலை அந்த அணி தக்கவைத்துக் கொள்ளவில்லை.
அதுமட்டுமின்றி நடந்த மெகா ஏலத்திலும் சஹாலை பெங்களூர் நிர்வாகம் வாங்க முயற்சி செய்யவில்லை.
சஹால் இடத்தை ஹசரங்கா பூர்த்தி செய்யவது மிகவும் கடினம் என்று சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். அவர்கள் கருத்துக்களை பொய்யாக்கும் விதமாக இன்றைய போட்டியில் மிக அற்புதமாக ஹசரங்கா பந்து வீசி இருக்கிறார். கொல்கத்தா அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை(கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன் மற்றும் டிம் சவுத்தி) கைப்பற்றியுள்ளார்.
முதல் போட்டியில் ஒரு விக்கெட் இன்று 2வது போட்டியில் 4 விக்கெட் என மொத்தமாக இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஹசரங்காவை பாராட்டியுள்ள முன்னாள் பெங்களூரு வீரர் சஹால்
2014 முதல் கடந்த ஆண்டு வரை பெங்களூரு அணியில் விளையாடி வந்த சஹால் தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவரை 6 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு அந்த அணியின் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் கைப்பற்றியது.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டியில் ஹசரங்கா மிக சிறப்பாக பந்து வீசுவதை பாராட்டும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு டிவிட் செய்துள்ளார்.”வணிண்டு ஹசரங்கா ஒரு சாம்பியன்” என்றவாறு அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவுக்கு கீழ் ரசிகர்கள் “பெங்களூரு அணி சஹாலை கைப்பற்றாத போதிலும் அவர் தற்போது பெங்களூரு அணி வீரரை எந்தவித ஈகோவும் இன்றி பாராட்டி இருக்கிறார். இதற்கு உண்மையில் மிகப் பெரிய மனது வேண்டும்”, என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.