எங்க டீம்ல சேர்ந்து.. இவங்க இந்திய அணியை தோற்கடிப்பதை நீங்க பாக்கதான் போறீங்க – இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பேட்டி

0
412

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டாக்ஸ் குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் ஏற்படுத்திய தாக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்ற பிறகு பயிற்சியாளர் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் பஸ் பால் முறையை இங்கிலாந்து அணி கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் முதல் இறுதி ஆட்டக்காரர் வரை அதிரடியாக விளையாடும் பழக்க முறையை இங்கிலாந்து அணியினர் கொண்டு வந்தனர்.

இது இங்கிலாந்து அணிக்கு நல்ல வெற்றிகளை கொடுத்ததோடு அதிக அளவில் வரவேற்பும் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பிரதமர் ஆன டேவிட் கேமரூன் இங்கிலாந்தின் தற்போதைய கேப்டன் பென் ஸ்டாக்ஸ் ஏற்படுத்திய தாக்கத்தை போன்று கிரிக்கெட் உலகில் இந்தியாவின் விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் அவர் ஒரு மிகச் சிறந்த தலைவர் என்றும் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்தில் பிரிட்டிஷ் இந்திய வீரர்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலியிடம் ஒரு அசாதாரண தலைவர் இருந்ததாக நான் உணர்கிறேன். சில நேரங்களில் பென்ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் ஏற்படுத்திய தாக்கத்தை போன்று களத்தில் நம்ப முடியாத கேப்டன்சி மற்றும் உத்வேகத்தை விராட் கோலி இடம் காணலாம். விராட் கோலியிடம் அந்த குணாதிசயம் இருந்தது என்று நினைக்கிறேன். தனது சிறப்பான கேப்டன்சியின் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி.. பிசிசிஐ WTC பைனலுக்காக அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம்

எனவே பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பார்க்க வேண்டும். இங்கிலாந்து அணிக்கு சில சிறந்த பிரிட்டிஷ் இந்திய வீரர்கள் வருகிறார்கள். வரவிருக்கும் ஆண்டுகளில் பல இந்திய பிரிட்டிஷ் வீரர்கள் இந்தியாவை எதிர்த்து போராடி வெற்றி பெறுவதை நீங்கள் காண்பீர்கள்” என்று கூறி இருக்கிறார். அதாவது இந்திய வம்சாவளி வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேர்ந்து இந்திய அணிக்காக விளையாடி பல வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புவதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் கூறியிருக்கிறார்.

- Advertisement -