ஆப்கானிஸ்தான அணிக்கு எதிரான இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களுக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சாம் கரன் தம்பி பென் கரன் ஜிம்பாப்வே ஒருநாள் அணியில் இடம் பெறுகிறார்.
ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து இந்தியா, இலங்கை, சார்ஜா ஆகிய இடங்களில் மற்ற அணிகளுக்கு எதிராக தங்களது சொந்தத் தொடர்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஆசியாவை தாண்டி தற்போது ஆப்பிரிக்க கண்டத்திற்கு விளையாட செல்லவிருக்கிறது. எனவே இந்த தொடர் எல்லா வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
கரன் குடும்பத்தின் பாரம்பரியம்
இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் டாம் கரன் மற்றும் சாம் கரன் தந்தை 1980 களில் ஜிம்பாப்வே அணிக்கு விளையாடியதோடு கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறார். பின் நாட்களில் அவரது தந்தை மறைய அந்த நாட்டை விட்டு வெளியேறிய அவரது குடும்பத்தார்கள் இங்கிலாந்து வந்தார்கள்.
இதில் அண்ணன் டாம் கரன் மற்றும் சாம் கரன் இருவரும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி விட்டார்கள். அதே சமயத்தில் இவர்களுடைய இளைய சகோதரர் பென் கரன் தற்போது ஜிம்பாப்வே கிரிக்கெட் பாரம்பரியத்தில் மீண்டும் இணைய இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
இரண்டு வெள்ளைப் பந்து தொடர்கள்
டி20 அணி: சிக்கந்தர் ராசா (கே), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ரியான் பர்ல், ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, தஷிங்கா முசெகிவா, முசரபாணி, டியான் மேயர்ஸ், நகாராவா மற்றும் நியூமேன் நியாம்ஹுரி.
இதையும் படிங்க :புரூக்கை என்னால் பிடிக்க முடியல .. இந்த விஷயத்தில் அவர்தான் வேர்ல்ட் பெஸ்ட் – ரூட் பாராட்டு
ஒருநாள் அணி: கிரெய்க் எர்வின் (கேட்ச்), பிரையன் பென்னட், பென் குரான், ஜாய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டினோடீன் மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நகாராவா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா, நியூமேன் நியாம்ஹுரி மற்றும் விக்டர் நியூச்சி.