அந்த ஒரே ஒரு விஷயத்தை தவிர.. ரோஹித் அணிக்கு இன்று எதுவுமே சரியாக நடக்கல – அஜய் ஜடேஜா பேட்டி

0
378

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிக மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி மோசமான பேட்டிங்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் பெங்களூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து எதிர்பாராத விதமாக 46 ரன்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஆல் அவுட் ஆனது.

அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்து இருக்கும் நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த போட்டியை டிரா செய்யவே இந்திய அணி கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உள்ள நிலையில் இந்திய அணிக்கு டாஸ் தவிர எதுவுமே சாதகமாக அமையவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டுக்கு வரலாற்றில் பெரிய நாள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இன்றைய நாளை பார்த்தால் இந்திய அணி டாஸ் மட்டுமே வென்று மற்ற அனைத்தையும் இழந்திருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. பந்து வீச்சில் முடிந்தவரை இந்திய அணி போராடியது. ஆனால் அதற்கு தகுந்த ஆதரவை பீல்டிங் கொடுக்கவில்லை. இதனால் வந்த வாய்ப்புகளும் அவர்களது கையை விட்டு நழுவியது. இந்திய கிரிக்கெட்டுக்கு நீண்ட நாட்கள் கழித்து இப்படி ஒரு நாள் வந்திருக்கிறது.

இதையும் படிங்க:எல்லா புகழும் ஐபிஎலுக்கே.. இந்திய அணி அத செஞ்சும் நாங்க மடக்க காரணம் இதுதான் – மேட் ஹென்றி பேச்சு

அதுதான் தற்போது நடந்துள்ளது நீங்கள் கிட்டத்தட்ட 365 நாட்கள் விளையாடுகிறீர்கள். அதில் ஒரு மோசமான நாளை கணக்கிட்டால் அந்த நாள் இன்றாக இருக்கலாம். இன்று வரலாற்றில் ஒரு பெரிய நாள் என்பதை ஸ்கோர் கார்டு காட்டுகிறது. டாஸ் வென்றதைத் தவிர இந்திய அணிக்கு இன்று வேண்டியதெல்லாம் நடக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -