எம்எஸ் தோனியே நினைச்சாலும்.. பாக் அணியை வழிநடத்த முடியாது.. இந்த விஷயம் அவர்களிடம் இல்ல – முன்னாள் பாக் கேப்டன்

0
355

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் அணியாக இந்த தொடரில் இருந்து வெளியேறி இருப்பது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெளியேறிய பாக் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசியாக 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய நிலையில், அதற்குப் பிறகு இந்த ஆண்டு தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்று வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய நிலையில், இந்திய அணிக்கு எதிராக கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய தருணத்தில் இறங்கியது.

இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எந்த ஒரு போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தாமல் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் முதல் அணியாக இந்தத் தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறியுள்ளது. அதாவது தொடர் ஆரம்பித்த ஐந்தாவது நாளிலேயே தொடரை நடத்தும் அணி வெளியேறி இருப்பது பல்வேறு விமர்சனத்தையும், சோகத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

தோனியே வந்தாலும் முடியாது

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை வெற்றிகரமான கேப்டனாக அறியப்படும் மகேந்திர சிங் தோனி மற்றும் யூனிஸ்கான் ஆகியோர் இருந்தால் கூட இந்த அணியை வழிநடத்த முடியாது என்று சில கருத்துக்களை பேசியிருக்கிறார். மேலும் இந்த போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி குறித்தும் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க:நான் இந்திய அணி குறித்து அப்படி சொல்லவே இல்லை.. பொய்யான செய்தி இது.. ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் மறுப்பு

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் மகேந்திர சிங் தோனி அல்லது யூனிஸ்கான் ஆகியோரை கேப்டனாக நியமித்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் இது விளையாடும் நிலைமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நான் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பரிடம் இருந்து இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்திருக்கிறது என்று கூறிய போதே நான் போட்டி முடிந்து விட்டதாக கூறிவிட்டேன்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -