கடந்த ஆண்டு ஜூலை மாதம் டி20 உலக கோப்பை நடைபெற்றதற்கு பிறகு தற்போது அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் இந்திய வீரர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மோசமான தோல்வியை சந்தித்தது. அதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது எதிர்பாராதவிதமாக காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறினார். அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரையும் இழக்க நேரிட்டது.
இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக அவரது காயம் குறித்து வெளிவந்த தகவலின் படி பும்ரா சுமார் ஏழு மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர், சாம்பியன் டிராபி மற்றும் ஐபிஎல் தொடர் போன்ற முக்கிய தொடர்களில் இருந்து விலக வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் பும்ரா விரைவில் குணமடைந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார் என்ற நம்புவதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பும்ரா மீது நம்பிக்கை உள்ளது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ராவை எதிர்கொள்ள எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் கடினமானது என்று நன்றாகவே தெரியும். கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை அவரைப் போன்ற வீரர்கள் நிச்சயமாக தேவை. எனவே பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் முழுமையாக குணம் அடைவார் என்று நம்புகிறேன். மேலும் இந்திய அணி விளையாட உள்ள துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன்.
இதையும் படிங்க:விராட் கோலி அந்த முட்டாள்தனத்தை நிறுத்தனும்.. இந்த 2 விஷயத்தை செய்யணும் – இயான் சேப்பல் அறிவுரை
மேலும் ஒரு விறுவிறுப்பான தொடரை நாங்கள் பார்ப்போம் என்று எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மற்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாடும் நிலையில் இந்திய அணி மட்டும் சில பாதுகாப்பு பிரச்சனை கருதி போட்டிகளை துபாய் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.






