இந்திய அணி பாகிஸ்தான் வரணும்.. அப்ப இந்த விஷயம் புரியும்.. எங்க துணிச்சல் இருக்கா? – ஹர்பஜன் சிங்குக்கு தன்வீர் அகமத் சவால்

0
183
Tanvir

அடுத்து 2025 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கான ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஹர்பஜன் சிங் இது குறித்து கூறியிருந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் சவால் விட்டிருக்கிறார்.

இது தொடர்பாக முன்பு பேசி இருந்த ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு நிலையற்றதாக இருக்கிறது என்றும், அங்கு தினந்தோறும் ஏதாவது நடைபெறுகிறது என்றும், எனவே வீரர்களின் நலனை விட பெரிது எதுவும் கிடையாது, இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதை ஆதரிப்பதாகக் கூறியிருந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் உலக நாடுகளில் பெரிய நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை என பரிசோதனைகள் செய்து கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் விளையாடிக் கொண்டு வருகின்றன. இந்த முறையும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இரண்டு அணிகளுமே வந்து செல்லவிருக்கின்றன.

இப்படி பெரிய நாடுகள் பாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்து அலசி முடிவு செய்த பிறகும், இந்திய டென்னிஸ் மற்றும் கபடி அணிகள் பாகிஸ்தான் வரும்பொழுது, இந்திய கிரிக்கெட் அணி மட்டும் வருவதில் என்ன பிரச்சனை? என பாகிஸ்தான் தரப்பில் இருந்து கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் இது குறித்து ஹர்பஜன் சிங் காட்டமாக பேசியதற்கு தன்வீர் அகமத் தற்பொழுது பதில் கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் கூறும் பொழுது “நாங்கள் சிங்கங்கள். நாங்கள் அனைவரும் சிங்கங்கள். நாங்கள் உங்கள் நாட்டிற்கு விளையாட வந்திருக்கிறோம். நீங்களும் இங்கு விளையாட வாருங்கள். உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் எல்லாவற்றையும் நாங்கள் கொடுப்போம். நீங்கள் ஒருமுறை வந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இல்லை.. எங்க இங்கிலாந்து பையன்தான் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் – டேவிட் லாயிட் கணிப்பு

பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே வெற்றி தோல்வி என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்தியாவிற்கு சென்று விளையாடிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும் இந்தியா சென்று விளையாடி திரும்பி வருகிறார்கள். இதைத்தான் துணிச்சல் என்றும் துணிச்சலான அணி என்றும் கூறுகிறார்கள். இதை இந்திய அணியும் செய்ய வேண்டும்? என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -