ரிஷப் பண்ட் இல்லை.. எங்க இங்கிலாந்து பையன்தான் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் – டேவிட் லாயிட் கணிப்பு

0
1810
Lloyd

உலக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் வேலையை மாற்றியவராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் அவரைப் போலவே விளையாடுவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் கூறியிருக்கிறார்.

கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் விக்கெட் கீப்பர் என்பவர் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிறந்தவராக இருக்க வேண்டும். அவர் பேட்டிங் எவ்வளவு சிறப்பாக செய்கிறார்? என்பதெல்லாம் இரண்டாவது விஷயமாகவே பார்க்கப்பட்டது. மேலும் அப்போது வந்த விக்கெட் கீப்பர்களும் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிப்பவர்களாக இல்லை.ஆனால் விக்கெட் கீப்பர்கள் கட்டாயம் நல்ல முறையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையை ஆடம் கில்கிறிஸ்ட் உலக கிரிக்கெட்டில் ஏற்படுத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் அவரைப் போலவே விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாகவும், பேட்டிங்கிலும் அதிரடியாகவும், அத்தோடு அவரைப் போலவே இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கும் ரிஷப் பண்ட் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் சிலரே கூறியிருந்தார்கள். இப்படியான நிலையில்தான் ரிஷப் பண்ட் பற்றி எப்பொழுதும் பேசாத டேவிட் லாயிட் தங்களுடைய இங்கிலாந்து அணியின் ஜேமி ஸ்மித் பற்றி பேசியிருக்கிறார்.

இது குறித்து டேவிட் லாயிட் கூறும் பொழுது “ஜேமி ஸ்மித் பற்றி நான் சில அறிவுள்ள ஆட்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த வார இறுதியில்தான் நான் அவரை முதன் முதலில் பார்த்தேன். கெவின் பீட்டர்சன் காலத்தில் இருந்து கூட நான் இருக்கையின் நுனியில் இருந்தது கிடையாது. ஆனால் ஜேமி ஸ்மித் அற்புதமாக அடிக்கிறார். இவரிடம் ஆடம் கில்கிறிஸ்ட் சாயல்கள் இருக்கிறது.

- Advertisement -

தற்போது மார்க் வுட் 35 வயதை எட்ட கூடியவராக இருக்கிறார். ஆனாலும் அவர் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசுகிறார். வேகம் எப்பொழுதுமே சிறந்த ஒரு சக்தி. ஆனால் அவர் அடுத்த ஆண்டு ஆசஸ் தொடர் திட்டத்தில் இருக்கிறாரா? இவர் என்னைப் போலவே இருக்கிறார்.

இதையும் படிங்க : அகர்கர் இத செஞ்சா.. ருதுராஜும் டீம்ல இருப்பாரு.. அந்த ஒரு விஷயம் போதாதா? – ராபின் உத்தப்பா யோசனை

அவர் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய வேகத்தை குறைக்கவே இல்லை. இதனால் தான் பந்து வீசும் முறையில் எந்தத் தவறும் செய்யவும் இல்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் நேற்று செயல்பட்டதை போல எப்பொழுதுமே எதிரணியை வீழ்த்துகிறார்கள். ஏனென்றால் உங்களால் உண்மையான வேகத்தை வெல்ல முடியாது. நல்ல வேகம் என்பது எதிரணியின் மனதுக்குள் புகுந்து தொந்தரவு செய்யக் கூடியதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -