இந்திய அணிய குற்றம் சொல்ல இங்கிலாந்து நீங்க யாரு?.. பாகிஸ்தான் நாங்களே எதுவும் சொல்லல – ரஷித் லத்திப் பேட்டி

0
104
Latif

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடுவது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தேவையில்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குற்றம் சாட்டி வருவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல பாதுகாப்பு காரணங்களுக்காக மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி ஒரே இடத்தில் துபாயில் விளையாடுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து முன்னால் வீரர்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் மற்றும் டேவிட் லாயிட் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குற்றம் சாட்டி வந்தார்கள்.

- Advertisement -

பெரிய சர்ச்சையாக வெடித்த விஷயம்

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அட்டவணை அறிவிக்கப்பட்ட பொழுது எந்த ஒரு அணி வீரர் மற்றும் கிரிக்கெட் வாரியம் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் இந்திய அணி துபாயில் முதல் இரண்டு போட்டிகளை மிகச் சிறப்பாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றதும் குற்றம் சாட்ட ஆரம்பித்தார்கள்.

இதன்பிறகு மைதானத்தில் இருக்கும் ஆடுகளங்கள் ஒரே மாதிரி இல்லை என்றும் தங்களுக்கும் இது பொதுவான இடம் என்றும் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் தந்திருந்தார். மேலும் இந்திய பயிற்சியாளர் கம்பீர் இந்திய அணி ஆதாயம் அடைகிறது என்று பேசுபவர்கள் தொட்டில் குழந்தைகள் அவர்கள் வளர வேண்டியவர்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரஷீத் லத்தீப் விமர்சனம்

இதுகுறித்து ரஷீத் லத்தீப் கூறும் பொழுது “பாகிஸ்தான் நாங்கள் இந்திய அணிக்கு ஒரே இடத்தில் விளையாடுவது சாதகம் என்று சொன்னால் உங்களுக்கு புரியும். ஆனால் இங்கிலாந்து முன்னால் வீரர்கள் ஏன் இப்பொழுது இதைப்பற்றி சினுங்குகிறார்கள்? அவர்கள் வேறொருவர் விஷயத்தில் அதிகமாக ஈடுபட முயற்சி செய்கிறார்கள்”

” நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அட்டவணையை அமைப்பதில் சிக்கல் இருந்தது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக லீக் சுற்றின் கடைசி போட்டியில் விளையாடிய பொழுது, அதற்கு முந்தைய நாள் கராச்சியில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதனால் செமி பைனலில் யார் யாருடன் மோதுவது என்பது குழப்பம் ஆகிவிட்டது”

இதையும் படிங்க : விராட் கோலி பத்தி உத்தப்பா சொன்னது உண்ம இல்லை.. 2019 உலகக்கோப்பை நடந்தது இதுதான் – அம்பதி ராயுடு விளக்கம்

“இது ஐசிசி மற்றும் இதில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் தவறு. நீங்கள் இதை ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டீர்கள், தற்போது உங்கள் அணி வெளியேறிவிட்டதும் புலம்ப ஆரம்பித்து விட்டீர்கள். கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து பிரதிநிதிகளும் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களுக்கு ஐசிசி கூட்டத்தில் இதை சொல்ல நல்ல நேரம் இருக்கிறது. அங்கு உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -