சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் கடந்த முறை இந்திய அணியை அவுட் செய்தது குறித்து சில சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடிய நிலையில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி முகமது அமீரின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதேபோல மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 21 ரன்களில் வெளியேற, கேப்டன் விராட் கோலி ஐந்து ரன்னில் முகமது அமீரின் பந்துவீச்சில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகளை முகமது அமீர் வீழ்த்த அப்போதே இந்திய அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானதாக தான் உணர்ந்ததாக முகமது அமீர் தற்போது சில முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவ்வாறு விரிவாக கூறும்போது “அந்தப் போட்டி நடைபெற்ற ஆடுகளம் குறித்து கூற வேண்டும் என்றால், உண்மையாக ஆடுகளத்தில் அப்போது அதிக அளவு ஸ்விங் இல்லை. காலையில் பார்த்தபோது கூட ஆடுகளத்தில் பெரிதாக எந்த ஒரு அசைவும் இருந்ததில்லை. ஆனால் அந்த சமயத்தில் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக நடக்கப் போகிறது என்கிற உள்ளுணர்வு மட்டும் எனக்குள் இருந்தது. நான் முதலில் ரோஹித் சர்மாவை அவுட் ஆக்கிய போது அப்போது பெரிய ஒரு எனர்ஜி உருவாகியது.
இதையும் படிங்க:நான் கிரிக்கெட் ஆடுனப்போ.. அதை செய்ய சொன்னா படபடப்பே வந்துரும்.. டிராவிட்கிட்ட சொல்லிருக்கேன் – சஞ்சய் மஞ்சுரேக்கர்
மேலும் விராட் கோலி அவுட் ஆனவுடன் நாங்கள் 60% ஆட்டத்தை வெற்றி பெற்றதாக நினைத்தேன். ஆனால் அது ஒரு கற்பனையான உணர்வாக எனக்குள் இருந்தது” என்று முகமது அமீர் கூறி இருக்கிறார். அப்போது தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 158 ரண்களுக்கு ஆல் அவுட் ஆகி பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியின் காரணமாகவே தற்போது பாகிஸ்தான் அணி இந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்த முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.