நான் கிரிக்கெட் ஆடுனப்போ.. அதை செய்ய சொன்னா படபடப்பே வந்துரும்.. டிராவிட்கிட்ட சொல்லிருக்கேன் – சஞ்சய் மஞ்சுரேக்கர்

0
49

இந்திய கிரிக்கெட்டில் தற்போது புகழ்பெற்ற வர்ணனையாளராக திகழும் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடி தனக்கு என்ற ஒரு தனி முத்திரையை பதித்தவர்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ராகுல் டிராவிட் மற்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆகியோர் தங்கள் விளையாடிய காலகட்டம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை கலக்கிய இரு ஜாம்பவான்கள்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 இன்னிங்ஸ்களில் 2043 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரை 74 போட்டிகளில் விளையாடி 1994 ரன்கள் குவித்திருக்கிறார். மற்றொரு கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர் தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக திகழ்ந்து டி20 உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் அவர் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்கள் மற்றும் 344 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்கள் என இந்திய கிரிக்கெட்டில் தனது தனி சாம்ராஜ்யத்தை படைத்திருக்கிறார். இருப்பினும் இவர்கள் இருவருமே பெரிதாக சிக்ஸர்கள் தூக்கி அடிக்காமல் தரையோடு விளையாடக்கூடிய பிளேயர்களாகவே இருந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற சிந்தனை வரும்போது தனக்கு ஒரு விதமான படபடப்பு உண்டாகும் என சில சுவாரசியமான கருத்துக்களை அவரும் டிராவிட்டும் தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

எனக்கு அப்போது இதயத்துடிப்பே வந்துவிடும்

இது குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறும்போது “தற்காப்பு பேட்ஸ்மேன்கள் பவுலர்களை தாக்கி விளையாடும் போது எப்படி இருக்கும் என்று நானும் டிராவிட்டும் பேச ஆரம்பித்தோம். நான் பெரிய ஷாட்கள் விளையாடும் போது எனக்கு கொஞ்சம் படபடப்பு ஏற்படும் என்று அவரிடம் கூறி இருக்கிறேன். அடுத்த பந்தை நான் பெரிய சிக்சருக்கு அடிக்க வேண்டும் என்றால் என் இதயத்துடிப்பு அப்போது தொடங்கும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீர் செஞ்ச அந்த ஒரு தப்புதான்.. இந்திய அணி தோக்குறதுக்கு முக்கிய காரணம் – பாக் பசித் அலி கருத்து

இது குறித்து டிராவிட் அவருக்கு பதிலளிக்கும் விதமாக கூறும் போது “நான் விளையாடும் சமயங்களில் சிக்ஸர் அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணரும்போது சிக்ஸர் அடிப்பதற்கு முன்பு மூன்று ஓவர்களுக்கு முன்பாகவே நான் திட்டமிட்டு விடுவேன்” என்று டிராவிட் கூறி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள ராகுல் டிராவிட் ஆகஸ்ட் 2011ம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 21 பந்தில் 31 ரன்கள் எடுத்துள்ளார். 14 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது இங்கிலாந்து வீரர் சமித் பட்டேலின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -