இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ள நிலையில் அதற்கு அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கு பெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி இந்திய வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீது அதிக அளவு கவனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சமீபத்தில் இவர்கள் இருவர்களுடைய பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கும் நிலையில் மீண்டும் தங்களது பழைய பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு விக்கெட் கீப்பர் பட்டியலில் இந்திய தரப்பில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் என மூன்று வீரர்கள் போட்டியில் இருக்கும் நிலையில் கேஎல் ராகுலுக்கு இது கடினமாக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் விராட் கோலி குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதில் விராட் கோலி தான் டாப்
இது குறித்து பாசித் அலி கூறும் போது “என்னைப் பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு ரிஷப் பண்ட் இந்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தை பெற வேண்டும். அதற்குப் பிறகு சஞ்சு சாம்சன் இரண்டாவது இடத்தில் இருப்பார். ஆனால் கே எல் ராகுலுக்கு இது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இந்திய வீரர்களின் உடற்தகுதி குறித்து கேட்கிறீர்கள். இந்திய வீரர்களின் உடல் தகுதி என்றால் என்னை பொருத்தவரை விராட் கோலி தான் முதல் இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க:435-5.. 304 ரன் வித்தியாசம்.. ஸ்மிருதி மந்தனா மெகா சாதனைகள்.. அயர்லாந்து படுதோல்வி.. இந்திய பெண்கள் அணி அபார வெற்றி
ஜெய்ஸ்வால் மற்றும் கில் போன்ற வீரர்கள் நல்ல உடல் தகுதியோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் உயர்தர வீரர்கள் கிடையாது. விராட் கோலி உடற் தகுதியில் எப்படிப்பட்ட வீரர் என்றால் களத்தில் எந்த நேரத்திலும் தயாராக இருக்கக்கூடிய ஒரு வீரராக இருக்கிறார். மைதானத்தில் ஓடுவது, ஸ்லிப், கவர், மிட் ஆப் அல்லது மைதானத்தில் கத்துவது போன்ற எந்த செயல்பாட்டிலும் அவர் முன்னணியில் இருக்கிறார்” என்று பசித் அலி கூறி இருக்கிறார்.






