இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிரான முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் துணைக் கேப்டன் சுப்மான் கில்லின் சிறப்பான ஆட்டத்தால் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கில்லின் ஆட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.
இந்தியா வங்காளதேசம் இரண்டாவது போட்டி
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான்கில் சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடினாலும், அதற்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி தனது அருமையான பேட்டிங் பார்மை மீட்டெடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்து தனது சிறந்த பேட்டிங் திறனை நிரூபித்திருக்கிறார்.
இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்டுகள் இழந்தாலும் கில் நிலையாக நிலைத்து நின்று அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கில் விளையாடுவதும், கார் ஓட்டுவதும் ஒன்றுதான் என அதனை ஒப்பிட்டு சில கருத்துக்களை பேசியிருக்கிறார்.
கில் அற்புதமாக விளையாடினார்
இது குறித்து பசித் அலி விரிவாக கூறும்போது “இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும் கில் பாட்னர்ஷிப்ளை உருவாக்கியது மிக அற்புதமாக இருந்தது. அவர் ஒரு ரன் மெஷினாக இருந்து வருகிறார். அவர் தனது ஃபார்மை தொடர்ந்து வருகிறார். அவர் முதல் கியரில் காரை ஸ்டார்ட் செய்து பின்னர் கியர்களை மாற்றுகிறார் இடையில் ஸ்பீடு பிரேக் வருகிறது. காலியான சாலை வரும்போது அவர் மிக வேகமாக செயல்படுகிறார். விராட் கோலி அவுட் ஆனபோது அது இந்திய அணியை கடுமையாக பின்னோக்கி தள்ளியது.
இதையும் படிங்க:ரோஹித் இதை டீம்க்காக செய்யலாம்.. ஆனா அதுவே இந்திய அணிக்கு பிரச்சனையா மாறும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும், கில் நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் நன்றாக பேட்டிங் செய்தார் ஒரு மிகப்பெரிய சிக்சர் அடித்தார். அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்” என்று பசித் அலி கூறி இருக்கிறார். இந்திய அணி அடுத்ததாக வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாட உள்ள நிலையில் அதிலும் கில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






