பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி பாபர் அசாம் மீண்டும் பார்முக்கு வர வேண்டுமானால் இவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் குறித்தும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்து கடுமையான விமர்சனங்களை பெற்றது. முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான வரலாற்று தோல்வியாக பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் பாபர் அசாமை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பாபர் மீண்டும் ஃபார்முக்கு வரவும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வெல்லவும் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் ஷான் மசூத்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முகமது ரிஸ்வானை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பாசித் அலி கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “முகமது ரிஸ்வானை கேப்டன் ஆக்கினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வித்தியாசமான பாபர் அசாமை காண்பீர்கள். ஆனால் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் நிபந்தனை. மேலும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் குறித்து கூற வேண்டும் என்றால் அவரது சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் அபாரமாக உள்ளது.
ஜோ ரூட் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று ஆங்கில ஊடகங்கள் கூறி வருகின்றன. ரூட் அந்த சாதனையை முறியடிக்க மாட்டார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அவர் சதம் அடித்தால் பந்து வீச்சாளர்களை நான் சும்மா விடமாட்டேன். சச்சின் டெண்டுல்கரின் அந்தஸ்து வித்தியாசமானது. அவர் மிகப்பெரிய மகத்தான வீரர்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:147 வருடம்.. பிராட்மேனும் செய்யாத சாதனை.. இலங்கை டெஸ்டில் ஒல்லி போப் ரேர் ரெகார்ட்.. வாகனும் பாராட்டு
முகமது ரிஸ்வான் நான்கு இன்னிங்ஸ்களில் 98 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் என 294 ரன்கள் குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஸ்வானை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரூட் முறியடிக்க வாய்ப்பு இல்லை எனவும் பாசித் அலி கூறியிருக்கிறார்.