இன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் ஒல்லி போப் சதம் அடித்ததின் மூலமாக ஒரு அரிய சாதனையை படைத்திருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி உள்நாட்டில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் வழக்கமான கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் தற்காலிகமாக துணை கேப்டன் ஒல்லி போப் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார்.
இங்கிலாந்து அணி அதிரடி
இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் இலங்கை அணியே டாஸ் வென்றது. டாஸ் வென்ற அந்த அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்கார டான் லாரன்ஸ் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக 79 பந்துகளில் 86 இடங்கள் எடுத்தார்.
ஜோ ரூட் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் ஒன்லி போப் அதிரடியாக விளையாடி 103 பந்துகளில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். துணை கேப்டன் ஹாரி புரூக் 8 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார். வெளிச்சமின்மையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இங்கிலாந்து அணி 44 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் அதிரடியாக எடுத்திருக்கிறது.
ஒல்லி போப் செய்த அரிய சாதனை
இந்த போட்டியில் ஒல்லி போப் அடித்த சதம் அவருக்கு சர்வதேச ஏழாவது டெஸ்ட் சதமாக அமைந்தது. மேலும் இந்த ஏழு சதத்தையும் அவர் ஏழு வெவ்வேறான நாடுகளுக்கு எதிராக அடித்திருக்கிறார். இதுவரையில்டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய முதல் ஏழு சதத்தை எந்த வீரரும் வெவ்வேறு ஏழு அணிகளுக்கு எதிராக அடித்தது கிடையாது.
ஒல்லி போப் அடித்த சர்வதேச ஏழு சதங்கள்
135* எதிராக தென் ஆப்பிரிக்கா
145 எதிராக நியூசிலாந்து
108 எதிராக பாகிஸ்தான்
205 எதிராக அயர்லாந்து
196 எதிராக இந்தியா
121 vs வெஸ்ட் இண்டீஸ்
103* எதிராக இலங்கை
இதையும் படிங்க: 44 ஓவர் அதிரடி.. மீண்டும் பாஸ்பால் ஆடிய இங்கிலாந்து.. சிக்கிய இலங்கை அணி.. போப் பதிலடி
மேலும் இங்கிலாந்து கேப்டன் பதவிக்கு ஒல்லிப் போப் தகுதி இல்லாதவர் மேலும் இன் செக்யூரிட்டி கொண்டவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்த மைக்கேல் வாகன் தற்பொழுது ஒல்லி போப் சதம் அடித்ததை பாராட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.