இங்க டார்கெட் ஷாகின் அப்ரிடிதான்.. எங்க கேப்டன் நல்ல இங்கிலீஷ் பேசி ஏமாத்துறார் – பாக் பசித் அலி விமர்சனம்

0
69
Basit

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் நீக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம், இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா உள்பட ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிப்பது போலானது

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பசித் அலி கூறும் பொழுது “பாபர் அசாம், நசீம் ஷா மற்றும் ஷாகின் அப்ரிடி மூவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதுதான் சரியானது. ஒருவேளை அவர்களை நீக்கியதாக கூறியிருந்தால் அது பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிப்பது போல ஆகியிருக்கும். இவர்கள் எங்களுடைய ஹீரோக்கள். இவர்களுக்கும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்”

“தங்களுடைய நலன்களுக்காக பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஒரு ஆடுகளத்தை உருவாக்கினார்கள். துரதிஷ்டவசமாக நல்ல ஃபார்மில் இல்லாத பாபர் அசாம் இப்படியான ஒரு ஆடுகளத்தை பயன்படுத்தி ரன்கள் குவிக்க முடியாமல் போய்விட்டது. அதே சமயத்தில் நீக்கப்பட்ட இந்த மூன்று வீரர்களும் தென் ஆப்பிரிக்க தொடரில் நிச்சயம் அங்கு இருப்பார்கள். அங்கு பெரிய மனம் கொண்ட வீரர்கள் தேவை”

- Advertisement -

கேப்டன் நல்ல ஆங்கிலத்தில் பேசி ஏமாற்றுகிறார்

மேலும் பேசிய பசித் அலி “கேப்டன் ஷான் மசூத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நல்ல ஆங்கிலத்தில் பதில்களை சொல்லி எங்களுடைய பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார். தங்கள் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட் கைப்பற்றவில்லை என்று கூறிய அவர், தாங்கள் எப்படி 20 விக்கெட்டை இழந்தோம் என்று ஏன் பேசவில்லை?”

இதையும் படிங்க : ஜெயவர்த்தனே வந்தாச்சு.. இனி மும்பை இந்த 6 பேரை 79 கோடிக்கு தக்க வைப்பாங்க – ஐபிஎல் 2025 பற்றி ஆகாஷ் சோப்ரா பேட்டி

“இங்கு டார்கெட் செய்யப்படுவது ஷாகின் அப்ரிடியை மட்டும்தான். அதற்கு காரணம் ஷாகின் அப்ரிடிதான். ஏனென்றால் அவருக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரிவதில்லை. சிரித்து பேசும் எல்லோரையும் நம்பி விடுகிறார். ஆனா அவருக்கு எதிராக மிகவும் நுட்பமான வேலைகள் நடைபெறுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -