ஐபிஎல் நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பாக ஒரு அணி தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் குறித்த பட்டியலை அறிவித்தது. எனவே ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைப்பு வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
மும்பை இந்தியன் அணியின் தக்கவைப்பு வீரர்கள்
ஐபிஎல் தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ரோகித் சர்மா தலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வெற்றி வரலாறு படைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே குஜராத் அணியில் கேப்டனாக திகழ்ந்த ஹர்திக் பாண்டியாவை திரும்பவும் கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எடுத்து பேட்டிங் வரிசை மற்றும் ஆல் ரவுண்டர் பட்டியலை பெரிதாக்கிக் கொண்டது.
இந்த சூழ்நிலையில் தற்போது மகேலா ஜெயவர்த்தனே மீண்டும் மும்பை அணியில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு வீரர்களை தக்கவைக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். ஆறு வீரர்களை தக்க வைத்து 79 கோடிகளை செலவு செய்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பிளேயிங் லெவனை கொண்டிருக்கும் காரணத்தால் அது அணிக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறி இருக்கிறார்.
எந்த பாதிப்பும் கிடையாது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மகேலா ஜெயவர்த்தனே மீண்டும் வந்துள்ளார். அதனால் அணியில் சில மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி கட்டாயம் வலுவான அணியை தக்க வைக்க நிச்சயமாக முயலும். ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா/ இஷான் கிஷான் , பும்ரா. அதற்குப் பிறகு ஆறாவது வீரராக நெஹல் வதேரா இருக்கிறார்.
இதையும் படிங்க:கோலி கொடுத்த அட்வைஸ்தான்.. இப்ப புஜாராவை தூக்க ஹெல்ப் பண்ணுச்சு – தமிழக வீரர் குர்ஜப்நீத் சிங் பேட்டி
இதுபோல அவர்களிடம் நிறைய உள்ளது. எனவே மும்பை அணி 5+1 என்று ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொண்டு 79 கோடிகளை செலவு செய்து விட்டு அதற்குப் பின்னர் ஏலத்திற்கு செல்லலாம். அவர்கள் தக்க வைத்துக் கொள்ளும் ஆறு வீரர்களும் விளையாடும் பிளேயிங் லெவனின் ஒரு பகுதியாக இருப்பார்கள். மேலும் அவர்கள் அனைவரும் இந்தியர்களாக இருப்பதால் அது மும்பை அணிக்கு கூடுதல் சாதகம். எனவே அவர்களால் வலுவான அணியை கட்டமைக்க முடியும் ” என்று கூறியிருக்கிறார்.






