ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருவது போல் தெரிவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடிய விதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலியும் இதைச் சுட்டிக்காட்டி தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
சிங்கிள்ஸ் மறுத்த ஹர்திக் பாண்டியா
இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்த பொழுது அர்ஸ்தீப் சிங் பேட்டிங் செய்ய உள்ளே வந்துவிட்டார். அப்பொழுது இந்திய அணி மூன்று ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டி இருந்தது. இந்த நிலையில் சுழல் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடிக்கவும் செய்தார்.
இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு அடுத்தடுத்த ஓவர்களில் சிங்கிள் எடுக்க மறுத்து விட்டார். மீதமுள்ள ஓவர்களின் எல்லா பந்துகளையும் சந்திப்பதற்கு திட்டமிட்டார். ஆனால் அவருடைய திட்டம் பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை. நேற்று இறுதிவரை களத்தில் இருந்த அவர் 45 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி நேரத்தில் அவரிடம் இருந்து அதிரடி வெளிபடாததால் இந்திய அணிக்கு அது பின்னடைவாக அமைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “நேற்று ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அவர் விளையாடிய விதம் தனக்காக விளையாடுவது போல் இருந்தது. அணிக்காக விளையாடாமல் அவர் தனக்காக ஏன் விளையாடுகிறார்? அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவதற்கு தயாராகி வருவது போல் எனக்கு தெரிகிறது”
இதையும் படிங்க : 30 40 ரன் பிரச்சனை இல்ல.. கம்பீர் எனக்கு கொடுத்த அந்த ரோல் எல்லாத்தையும் மாத்திடுச்சு – வருண் சக்கரவர்த்தி பேட்டி
“அவர் சிங்கிள்ஸ் வேண்டாம் என்று மறுத்தபொழுது இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருக்கவில்லை. இந்திய அணி அப்பொழுது வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அவர் நிச்சயம் அந்த இடத்தில் சிங்கிள்ஸ் எடுத்திருக்க வேண்டும். அவர் இந்திய அணியின் பெரிய வீரர். இருந்தபோதிலும் அவரை விட அக்சர் படேல் நன்றாக விளையாடினார். அவர் துரதிஷ்டவசமாக 21 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்துவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.