இந்திய அணிக்கு தேர்வாகாத கடந்த மூன்று வருடங்கள் தனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்ததாக இந்திய சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.
நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக ஐந்து விக்கெட் கைப்பற்றி தனி ஒரு வீரராக இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை கொண்டு வந்து அசத்தினார். இருந்தபோதும் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்களின் சுமாரான செயல்பாட்டினால் கடைசியில் தோல்வி அடைந்தது.
கம்பீர் கொடுத்த கிளாரிட்டி
தன் கிரிக்கெட் பயணம் குறித்து பேசிய வருண் சக்கரவர்த்தி “கண்டிப்பாக கடந்த மூன்று வருடங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் விளையாடினோம் அப்பொழுது எங்களுக்கு கம்பீர் பயிற்சியாளராக இருந்தார். நாங்கள் அப்பொழுது நிறைய பேசினோம். அவர் எனக்கு என்னுடைய பங்களிப்பு குறித்து தெளிவு கொடுத்தார்”
“கம்பீர் என்னிடம் நீங்கள் 30 முதல் 40 ரன்கள் கொடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் நீங்கள் எப்பொழுதும் விக்கெட் எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். எனக்கு தற்போது அணியில்உள்ள பங்கு இதுதான். எனவே அவர்கள் எனக்கு கொடுத்த தெளிவு அப்பொழுது மிகவும் உதவியாக இருக்கிறது”
சூரியகுமார் கூறியது இதுதான்
“நேற்றைய போட்டியின் இடைவேளையின் போது கேப்டன் சூரியகுமார் என்னிடம் நாம் எல்லா விதத்திலும் சென்று பார்க்கலாம் என்று தெரிவித்தார். நாங்கள் அனைவரும் சேர்ந்து முயற்சி செய்ததும் அதுதான். நாங்கள்எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இந்த போட்டியை எங்களால் வென்று இருக்க முடியும்”
“நிச்சயமாக நாம் எடுத்த ஸ்கோர் குறைவாக இருக்கும் பொழுது நம்முடைய மனநிலை ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். இப்படியான நேரத்தில் நீங்கள் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே போட்டியை வெல்ல முடியும். மேலும் அடுத்த இரண்டு போட்டிகளில் என்னுடைய அணுகுமுறை இப்படித்தான் இருக்கப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அகர்கர் வருண் சக்கரவர்த்திக்கு நீங்க இத செய்யலனா.. பெரிய தப்பா போயிடும் – தினேஷ் கார்த்திக் அறிவுரை
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மீதம் இருக்கும் இரண்டு டி20 போட்டிகள் அடுத்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பதால், அடுத்த இரண்டு போட்டியையும் வெல்லும் அணியே தொடரை வெல்ல முடியும்!