ரோகித் இத செய்யறதா இருந்தா.. ஷமிய ஆட்றது வீண்தான்.. அவர விட்டுருங்க – பாக் பசித் அலி கருத்து

0
69
Basit ali

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ஆஸ்திரேலியா அழைப்பது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி முக்கியமான அறிவுரை ஒன்றை இந்திய அணிக்கு கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் சரியான அளவில் செயல்பட்டார்கள். ஆனால் அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இடம் பெற்று இருந்த ஹர்ஷித் ராணா எதிர்பார்த்த அளவுக்கு சரியாக இல்லை. எனவே முகமது ஷமியின் தேவை தற்பொழுது அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

ஷமி பற்றி ரோகித் சர்மா விளக்கம்

இதுகுறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் முகமது ஷமியை நல்ல உடல் தகுதியில் பெறவே விரும்புகிறோம். இங்கு அணிக்கு அழைத்து வந்து அவருக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. சில நிபுணர்கள் தற்பொழுது அவரை கவனித்து வருகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை பொறுத்து அவரை அழைப்போம். அவர் இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவுகள் திறந்தே இருக்கிறது”

“நாங்கள் அவரை நெருக்கமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் சையத் முஸ்தாக் அலி தொடரில் விளையாடும் பொழுது அவருக்கு கால் முட்டியில் சிறிது வீக்கம் இருந்தது. தற்போது அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு இருக்கிறாரா? என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அவருக்கு வலி இருக்கிறது அல்லது ஏதோ நடக்கிறது. எனவே நாங்கள் அவரை இங்கு கொண்டு வந்து அழுத்தம் தர விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஷமியை ஆடுவது வீண்

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி தனது கருத்தை தெரிவிக்கும் பொழுது, ஷமியை நான்காவது டெஸ்ட் போட்டிக்கு கொண்டு வருவது வீண் என்றும், அவர் விளையாடும் நிலையில் இருந்தால் அவரை மூன்றாவது போட்டியிலேயே விளையாட வைப்பதுதான் சரியானது என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : நாட்டுக்காக ஆடும் போது.. பும்ரா இதை எதிர்பார்க்கக் கூடாது.. நான் அதை ஏத்துக்க மாட்டேன் – கவாஸ்கர் கருத்து

இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “ஷமி ஆஸ்திரேலியா போகப் போகிறார். ஆனால் நான்காவது டெஸ்டில் விளையாடுவார் என்ற செய்திகள் வருகிறது. அவர் நான்காவது டெஸ்டில் விளையாடுவதால் இந்திய அணிக்கு எந்த பயனும் கிடையாது. இப்போதே அவரை அனுப்பி மூன்றாவது டெஸ்டில் பிரிஸ்பேனில் விளையாட வைக்க வேண்டும். நீங்கள் அவரை மெல்போர்ன் நான்காவது டெஸ்ட் அழைப்பதாக இருந்தால் அழைக்க வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -