ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா என்ன செய்ய வேண்டும்? எதை எதிர்பார்க்கக் கூடாது என்பது குறித்து சுனில் கவாஸ்கர் அதிரடியாக பேசியிருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்போது தற்காலிகமாக சமநிலையில் இருக்கிறது. எனவே முன்பை விட அதிகபட்ச உழைப்பை இரு அணிகளுமே செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன.
பும்ரா தரும் கவலை
தற்போது இந்திய அணியின் மிக முக்கிய துருப்புச் சீட்டாக பும்ரா இருந்து வருகிறார். ஆஸ்திரேலியா மண்ணில் தற்போது இந்திய அணி ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்றால் அதில் இவரது பங்கு பெரிய அளவில் இருக்க வேண்டும் என்கின்ற நிலை இருக்கிறது. ஆனால் அவர் மீதம் இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவாரா என்பது சந்தேகம். அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கொஞ்சம் காயம் இருந்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து பேசி இருக்கும் கவாஸ்கர் கூறும் பொழுது “அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும் பொழுது பணிச்சுமை பற்றி எல்லாம் கேள்வி முன் வைக்க முடியாது.அவர் காயமடைந்தால் தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும். இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிந்தது. மீதம் இதில் மூன்று நாட்கள் இருக்கிறது”
ஆறாவது ஓவரும் கொடுங்கள்
மேலும் பேசிய கவாஸ்கர் “பும்ராவுக்கு காயம் இருந்தால் எல்லாம் சரி. அப்படி எதுவும் இல்லாவிட்டால் அவர் நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் வீசி அந்த நேரத்தில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தால், அவரிடம் ஆறாவது ஓவரையும் கொடுத்து இன்னொரு விக்கெட்டுக்கு போகச் சொல்ல வேண்டும்”
இதையும் படிங்க : ரோகித் கேப்டன்ஷியில் இந்த பெரிய தப்புகளை செய்தார்.. ஹெட் சதம் அடிக்க அவரே காரணம் -ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
“அவர் உங்களுடைய முக்கிய துருப்புச் சீட்டு. அவர் முழுமையாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாட மாட்டார் என்றால், நீங்கள் ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை குறைத்துக் கொள்கிறீர்கள். அவர் எப்படி பயன்படுத்தப்படுகிறார் என்பது கேப்டனின் கையில் இருக்கிறது. அவரை அப்படி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் ஒவ்வொரு முறை பந்து வீசப்படும் பொழுது மிகவும் திறமையாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.