ஜெய்ஸ்வால் நீங்க ஒரு கச்சா பேட்ஸ்மேன்தான்.. 2வது முறை இப்படி பண்ணியிருக்கக் கூடாது – பாக் பசித் அலி விமர்சனம்

0
79
Jaiswal

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசிட் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வருடம் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இருந்து வருகிறார். சர்வதேச அனுபவம் குறைவாக இருந்த பொழுதிலும் அவருடைய பேட்டிங் மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் பசித் அலி நேர்மாறான கருத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

முதல் முறையாக ஜெய்ஸ்வாலுக்கு நடந்த சோகம்

இந்தியாவில் ஜெயஸ்வால் விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளில், ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 50 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்தான் இந்தியாவில் அவர் 50 ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை காணப்பட்டது. இருந்த போதும் பொறுமையாக அதிக பந்துகளை சந்தித்து நம்பிக்கை தந்தார். ஆனால் இறுதியில் பந்தை அடிக்க நினைத்து ஆட்டம் இழந்தார். குறிப்பாக அஜாஸ்படேல் மிகச் சிறப்பான கேட்ச் பிடித்த காரணத்தினால் விக்கட்டை கொடுத்தான். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அப்படி இல்லாமல் தனது விக்கெட்டை தாமாகவே கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் இன்னும் கச்சா பிளேயர்தான்

இதுகுறித்து பாகிஸ்தான் பசித் அலி கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் இன்னும் ஒரு கச்சா பிளேயர்தான். அதாவது இன்னும் அவர் மெச்சூரிட்டி ஆகவில்லை. ஜெய்ஸ்வால் உங்களிடம் நிறைய சாட் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்கின்ற காரணத்தினால் களத்தில் அதிக நேரம் நிற்க வேண்டியது முக்கியம் என் இளவரசே!”

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் ODI.. இலங்கை அணி அறிவிப்பு.. இந்திய தொடரில் விலகிய முக்கிய மூன்று பேர் சேர்ப்பு

“நீங்கள் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி டாஸ் வென்று தவறாக பேட்டிங் எடுத்த காரணத்தினால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் உங்கள் விக்கெட்டை இழந்து விட்டீர்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அஜாஸ் படேலுக்கு உங்கள் விக்கெட்டை இலவசமாக கொடுத்து விட்டீர்கள். அந்த நேரத்தில் அணிக்காக நீங்கள் அதிக நேரம் கிரீஸில் இருக்க வேண்டி இருந்தது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -