வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வரும் சூழ்நிலையில் ஏற்கனவே டி20 தொடரை 2-1என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அடுத்ததாக நடைபெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் இணைந்த மூன்று வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு சுதாரித்துக் கொண்ட இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் வருகிற இருபதாம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளும் இலங்கையில் உள்ள பல்லிகேலே மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டி 20ம் தேதியும் இரண்டாவது போட்டி 23ஆம் தேதியும் மூன்றாவது போட்ட 26ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் சமிந்து விக்கிரமசிங்கே தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு
மேலும் அந்த தொடரில் அறிமுகமான முகமது ஷிராஸ் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய சுழற் பந்து ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவும் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் ஒரு நாள் தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார். மேலும் இந்திய தொடருக்கு முன்பாக காயம் காரணமாக வெளியேறிய பத்திராணா இந்தத் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:110 பந்தில் 100 ரன்.. சச்சின் கோலி சாதனை பட்டியலில் இணைந்த சர்பராஸ் கான்.. நியூசிலாந்து டெஸ்ட்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணி: சரித் அசலங்க (C), அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரஹம், சமிது விக்ரஹாம், மஹேஷ் தீக்ஷன .






