பாபர் நீங்க தோனி கிடையாது.. எல்லாரும் ஷாகின் அப்ரிடிக்கு பெரிய தப்பு பண்ணிட்டிங்க – அகமத் சேஷாத் விமர்சனம்

0
18
Dhoni

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து உள்நாட்டு முன்னாள் வீரர்களால் விமர்சிக்கப்பட்டு கொண்டு வருகிறது. தற்பொழுது அவர்கள் டி20 உலகக் கோப்பையை எதிர்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

பாபர் அசாம் முன்பு கேப்டனாக இருந்த பொழுது அவர் தனக்கு வேண்டிய வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வைத்துக் கொள்கிறார் என்று வெளியில் இருந்து குற்றச்சாட்டு கூறப்பட்டது. சில முன்னாள் வீரர்கள் பாபர் அசாம் கேப்டன்சி குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

- Advertisement -

மேலும் கேப்டனாக இருந்த பாபர் அசாம் உடன் முரண்பட்டு இமாத் வாசிம் மற்றும் முகமது அமீர் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று சென்றார்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் தற்பொழுது பாபர் ஆசம் கேப்டன் பொறுப்புக்கு கீழ் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக கொண்டுவரப்பட்டு இருப்பது குறித்தும், ஒரு கேப்டனாக அவர் எவ்வளவு சுமாராக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறித்தும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “பாபர் அசாமுக்கு முன்பாக கேப்டனாக இருந்த சர்பராஸ் கான் அணி நல்ல முடிவுகளை கொண்டு வந்தது. அவர் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதேபோல் பாபர் அசாம் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்று எல்லாவற்றையும் நியாயப்படுத்தட்டும். இருந்தாலும்ஒரு கேப்டனுக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்காது. அவருக்கு மொத்தம் ஐந்து ஐசிசி தொடர்களில் கேப்டனாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸியில் நல்ல டெக்னிக் பேட்ஸ்மேன்கள் இல்லை.. எங்ககிட்ட இருந்து கத்துக்கலாம் – ஒமான் கேப்டன் பேட்டி

ஒருவேளை பாபர் அசாம் தோனி போல இருந்திருந்து திரும்ப அவர் கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் பாபர் அசாம் தோனி கிடையாது. அவருக்கு நீண்ட காலம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஷாகின் அப்ரிடிக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து உடனே பிடுங்கியது பெரிய தவறு. மேலும் அவருடைய தலைமையில் சரியாக செயல்படாத வீரர்களுக்கு 35 முதல் 40 போட்டிகள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவெல்லாம் வேறு எங்கும் நடக்காதது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.