ஆஸியில் நல்ல டெக்னிக் பேட்ஸ்மேன்கள் இல்லை.. எங்ககிட்ட இருந்து கத்துக்கலாம் – ஒமான் கேப்டன் பேட்டி

0
158
Australia

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி நாளை காலை ஆஸ்திரேலியா மற்றும் ஒமான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஒமான் அணியின் கேப்டன் அகிப் இலியாஸ் ஆஸ்திரேலிய அணியில் நல்ல பேட்டிங் டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேன்கள் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

நமீபியா அணிக்கு எதிராக முதல் போட்டியில் ஒமான் அணி சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் 109 ரன்கள் மட்டும் எடுத்து கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்றது. சூப்பர் ஓவரில் நமீபியா அணி 20 ரன்கள் தாண்டி எடுக்க ஒமான் அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டி நடந்த வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் நாளை மீண்டும் ஆஸ்திரேலியா அணியை ஒமான் அணி சந்திக்க இருக்கிறது. ஆடுகளம் முந்தைய போட்டியில் இருந்தது போல மெதுவாகவும் பந்து நன்றாக சுழன்றும் திரும்பும் வகையில் இருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியை கொடுக்க முடியும் என ஒமான் கேப்டன் நம்புகிறார்.

இதுகுறித்து ஒமான் கேப்டன் அகிப் இலியாஸ் கூறும்பொழுது “கடந்த போட்டியில் பந்து எவ்வளவு தாழ்வாகவும் திரும்பியதும் என்று நீங்கள் பார்த்தீர்கள். ஆஸ்திரேலியா அணியில் கடந்த காலத்தில் ஸ்மித், லபுசேன் போன்ற நல்ல பேட்டிங் டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். தற்பொழுது பந்தை அடிக்கும் பேட்ஸ்மேன்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் சிக்ஸர் அடிக்க மட்டுமே முயற்சி செய்கிறார்கள். எனவே ஏற்கனவே இருந்த ஆடுகளம் போல் கிடைத்தால் அவர்களை தொந்தரவு செய்ய முடியும்.

நாம் நல்ல தரமான சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கும் பொழுது மெதுவான ஆடுகளத்தில் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம் தைரியமாகவும் அதே சமயத்தில் சரியான இடத்தில் பந்தை வைப்பதும் முக்கியமானது. ஏனென்றால் பந்து எப்படி வரும் என்று பேட்ஸ்மேனுக்கு தெரியாது. பந்தில் ஏதாவது மாற்றம் இருந்தால் பேட்ஸ்மேன் ஆட்டம் இழப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : உலக கோப்பையை இந்த முறை ஜெயிச்சிடுவீங்களா? – ரோகித் சர்மா தந்த தரமான பதில்

நாங்கள் இழப்பதற்கு எதுவும் கிடையாது. ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் ஒரு அப்செட் இருக்கிறது. எனவே எதுவும் நடக்கலாம். நாங்கள் ஆஸ்திரேலியா அணியை மதிக்கிறோம். ஆனால் ஆட்டத்திற்கு முன்பாக சோர்வு அடையாமல் இருப்பது முக்கியம். நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி வீரர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் அவர்களும் எங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விஷயங்கள் உண்டு” என்று கூறியிருக்கிறார்.