இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த விதம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிக்க, தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி எந்த விதமான ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தாமல் அதிக அளவு டாட் பந்துகளை சந்தித்து விளையாடியது. இதில் பாகிஸ்தான் அணையின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக கருதப்படும் பாபர் அசாம் 26 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம் அரைசதம் அடித்திருந்தாலும், அவரின் மெதுவான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சமீபகாலமாக விராட் கோலியை பாபர் அசாமுடன் ஒப்பிட்டு வரும் நிலையில், இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இது குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நாம் எப்போதுமே பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிடுகிறோம். இப்போது சொல்லுங்கள் விராட் கோலியின் ஹீரோ யார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார். அதைத் தொடர்ந்து விராட் கோலி அந்த பாரம்பரியத்தை பின்பற்றி தொடர்கிறார். இதில் பாபர் அசாமின் ஹீரோ யார்? நீங்கள் தவறான ஹீரோக்களை தேர்வு செய்துள்ளீர்கள், உங்களது சிந்தனை முறை தவறானது.
இதையும் படிங்க:திட்டம் மோசமா இருக்கலாம்.. ஆனா திட்டமே இல்லாம போறதுதான் ரொம்ப மோசம்.. பாக் அணியை விளாசும் ஆஸி கிளார்க்
பாபர் அசாமை பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அவர் ஒரு ஏமாற்றுக்காரர். இதில் நான் பாகிஸ்தான் அணியை பற்றி பேச கூட விரும்பவில்லை. எனக்கு சம்பளம் கிடைப்பதால் தான் நான் இதனை செய்கிறேன்” என்று அக்தர் பேசியிருக்கிறார். பாகிஸ்தான் அணி நிர்ணயத்தை 241 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடிய நிலையில் 244 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. விராட் கோலி 100 ரன்கள் எடுத்து தனது 82 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த நிலையில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது தற்போது உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.